சென்னையில் ஆந்திரா பவன், நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை-பேருந்துகள் சிறைபிடிப்பு!
நெய்வேலி: தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திரா மாநில அரசைக் கண்டித்து பல்வேறு இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களின் போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திரா அரசு சுட்டுப் படுகொலை செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆந்திராவை கண்டித்து போராட்டங்களை நடத்தினர். நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தலைமை வகித்தார்.

இதேபோல் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களில் ஆந்திரா மாநில பேருந்துகளை சிறைபிடித்தும் சாலை மறியலில் ஈடுபட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சென்னை ஆந்திரா பவன் முற்றுகை

சென்னையில் ஆந்திரா பவனை முற்றுகையிட்டும் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications