போலீஸ் கையை பிடித்து வெறியுடன் கடித்து வைத்த தவெக தொண்டர் ஜெமினி.. தருமபுரியில் கைது!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மதுபான பாரை அகற்றக்கோரி தவெக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, தலைமைக் காவலரின் கையை கடித்த தவெக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் கையைப் பிடித்து கடித்த தவெக தொண்டர் ஜெமினி கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகில் சொகுசு வசதிகளுடன் கூடிய தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான பார் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், பள்ளி செல்லும் மாணவர்களுகு இடையூறாக இருப்பதாகவும் கூறி அதனை அகற்றக்கோரி தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கிய தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா பேசுகையில், ஆட்சிக்கு வரும் முன்பு படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என கூறிய திமுக, அதற்கு மாறாக அரசு மதுபான கடைகளை அதிகரித்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென தனியார் பாரை தவெகவினர் முற்றுகையிட்டனர். தடுப்பை மீறி மதுபானக் கூடத்துக்குள் நுழைந்து தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதில் போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒரு இளைஞர் திடீரென போலீஸ் ஒருவரின் கையைப் பிடித்து கடித்தார். அவர் ஒன்றிரண்டு முறை கடிக்கவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
போலீசார் - தவெக தொண்டர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையான போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமாதானம் அடையாததால் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
தவெக தொண்டர், தலைமை காவலர் அருள் என்பவரின் கையை கடித்த வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், காவலரின் கையைக் கடித்த தவெக தொண்டர் ஜெமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தவெகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications