Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பன்னீரை விஞ்சி மோடியிடம் எடப்பாடியின் பவ்யம் படுபயங்கரமா இருக்கே.... திகிலில் தினகரன்!

பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த போது காட்டிய பவ்யத்தை பார்த்து பதைபதைத்ததாம் தினகரன் தரப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிய பவ்யத்தைப் பார்த்து திகிலடித்துப் போயுள்ளாராம் தினகரன்.

பணிவுக்கே பணிவு காட்டுபவர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ். அவரது பவ்யத்தை நாடே நன்கறியும். குனிவதில் மட்டுமல்ல சட்டென சசிகலா காலில் விழுந்ததைப் போல நெடுஞ்சான்கிடையாது விழுந்து கும்பிடுவதிலும் அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இதுதான் தமிழகத்தின் நிலைமையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது நிலைமை வேறாகிவிட்டது. பவ்யத்தின் உச்சத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படுத்தி தமிழக மக்களை அடடே! என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

எடப்பாடி

எடப்பாடி

ஆம் டெல்லியில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி காட்டிய பவ்யம் பணிவு இருக்கே... நெடுஞ்சானா விழுந்து காலில் விழுந்து கும்பிடாத குறைதான். இதைப் பார்த்து ஜெர்க்கான தினகரன் தரப்புக்கு தம்பிதுரை போட்டுக் கொடுத்த தகவலை கேட்டு திகிலாகினராம்.

அன்று ஓபிஎஸ்

அன்று ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்து மோடியை சந்திக்க டெல்லி சென்றார். அப்போது தம்பிதுரையை ஓரம் கட்டிவிட்டு மோடியுடன் தனியே ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.

இன்று எடப்பாடி

இன்று எடப்பாடி

அதேபாணியில் மோடியிடம் எடப்பாடி பழனிச்சாமியும் தனியே சந்தித்து பேசினார். இந்த தகவலை உடனே தினகரனுக்கு தெரியப்படுத்தினாராம் தம்பிதுரை. அப்படியே ஓபிஎஸ் மாதிரியே எல்லாவற்றையும் செய்கிறார் எடப்பாடியார் என தம்பிதுரை சொல்ல என்ன சொல்வது என தெரியாமல் திகைத்துப் போனாராம் தினகரன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+