பேஸ்புக் நட்பால் பலரிடம் சீரழிந்த திருப்பூர் பள்ளி மாணவி... பதற வைக்கும் தகவல்கள்
பேஸ்புக் நட்பால் திருப்பூர் சிறுமி,மாயமாகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:பள்ளி செல்லும் 13 வயது சிறுமி பேஸ்புக் நட்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி கடந்த 27ம் தேதி திடீரென மாயமானார். புகாரின்பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி, சிறுமி தானாகவே வீடு திரும்பினார்.கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

விசாரணை
சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன் பேஸ்புக்கில் திருப்பூரை சேர்ந்த சிவா என்ற பெயரில் அறிமுகமான 21 வயது வாலிபருடன், சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

பெயரே போலி
சிவா கடந்த 27ம் தேதி சிறுமியை திருப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு கடத்திச் சென்றுள்ளார். அப்போதுதான், அவனது பெயர் சிவா அல்ல, இப்ராஹீம் என்று சிறுமிக்குத் தெரிய வந்துள்ளது.

உதவி கேட்ட இடத்திலும் கொடுமை
இதையடுத்து அவனிடம் இருந்து நைசாக தப்பி லாட்ஜ் உரிமையாளர் பிரபாகரன் என்பவரிடம் உண்மையைக் கூறி உதவி கேட்டுள்ளார்.ஆனால் அதற்குள் சிவா தப்பிவிட்டார். பின்னர், ‘உன் பெற்றோரிடம் கொண்டு சேர்க்கிறேன்' எனக்கூறி சிறுமியிடம்,பிரபாகரனும் தவறாக நடந்துள்ளார். அவரிடம் இருந்து தப்பி திருப்பூர் வந்துள்ளார்.

இருவரையும் பிடித்த போலீஸ்
இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இப்ராஹீம், பிரபாகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications