"இலை" வேண்டுமா?... உ.பி., கேரளத்தில் போட்டியிடுங்க.. ஓபிஎஸ்ஸை நக்கல் பண்றாராமாம் தினகரன்!
இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றால், உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் இரட்டை இலை சின்னத்தில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டு கொள்ளட்டும் என்று டிடிவி தினகரன் நக்கல் செய்தார்.
திருவண்ணாமலை: இரட்டை இலை சின்னம் சசிகலா அணியைச் சேர்ந்த தங்களுக்குத்தான் என்றும் உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் அந்த சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிடட்டும் என்றும் அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலையில் தினகரன் கூறுகையில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் நாங்கள்தான் போட்டியிடுவோம். நாளை காலை 10 மணிக்கு சென்னையில் அதிமுகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

அதில் ஆலோசனை செய்து அதிமுக வேட்பாளர் யார் என்பதை தெரிவிப்போம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் பகல் கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது.
இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றால், உத்தரப்பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களில் சுயேச்சையாக நின்று இரட்டை இலையில் போட்டியிட்டுக் கொள்ளட்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலோடு ஓ.பன்னீர்செல்வம் அடங்கிவிடுவார்.
அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் சில விரும்பத்தகாத செயல்களை செய்து வருகிறார். அதை திமுக எம்எல்ஏ-க்களே விரும்பவில்லை. அதனால் திமுகவில் இருந்து சில எம்எல்ஏ-க்கள் வெளியேற உள்ளனர் என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications