ஊத்துக்குளியில் ஒரே டிராக்கில் 2 ரயில்கள்- எஞ்சின் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பயணிகள்
திருப்பூர்: ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சபரி எக்ஸ்பிரஸ் ரயில் நின்ற தண்டவாளத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அதை எஞ்சின் டிரைவர் கண்டுபிடித்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரோட்டில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து ஈரோட்டுக்கும் இரு ரயில் தண்டவாளங்கள் தனித்தனியாக உள்ளன. இதில் ஒரு தண்டவாளத்தில் இருந்து மறு தண்டவாளத்திற்கு செல்லும் வசதி ரயில் நிலையங்களில் உள்ளன. அவ்வாறு இணைத்து பிரிக்கும்போதுதான் ரயில்களுக்கு சிக்னல் கிடைக்கும்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ரயில் நிலையத்திலும் இதேபோல் இரு தண்டவாளங்களையும் தானியங்கி முறையில் இணைத்து பிரிக்கும் வசதி உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம் போல் தானியங்கி சிக்னலை ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த நிலைய அதிகாரி முகேஷ்குமார் இயக்கினார். அப்போது, தானியங்கி சிக்னல்களை இயக்கும் மோட்டாருக்கு செல்லும் மின் இணைப்பில் பியூஸ் போனதாக தெரிகிறது.
இந்த நிலையில் கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூரை தாண்டி ஊத்துக்குளி ரயில்நிலையம் அருகே காலை 7.25 மணிக்கு வந்தது. அதே நேரம் ஹைதராபாத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சபரிஎக்ஸ்பிரஸ் ரயில், ஈரோட்டில் இருந்து புறப்பட்டு ஊத்துக்குளி ரயில் நிலையம் அருகே வந்தது.
ஊத்துக்குளி ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக சிக்னல் கிடைக்காமல் இரு ரயில்களையும் அதன் டிரைவர்கள் தாங்கள் வந்த தனித்தனி தண்டவாளங்களில் ரயில் நிலையத்துக்கு வெளியே நிறுத்தி இருந்தனர்.
இதற்கிடையே தானியங்கி முறையில் சிக்னல் இயங்க முடியாமல் அனைத்து பகுதிகளிலும் சிவப்பு விளக்கு எரிந்தது. இதனால், தண்டவாள இணைப்பை மேனுவலாக மாற்றும்படி பணியில் இருந்த ரயில்வே ஊழியர் திலீப்குமாரிடம், ஊத்துக்குளி ரயில் நிலைய அதிகாரி முகேஷ்குமார் தெரிவித்துள்ளார.
இந்நிலையில் ஈரோடு நோக்கி செல்லும் தண்டவாளத்துக்கு செல்வதற்கு பதிலாக, சபரி எக்ஸ்பிரஸ் ரயில் இருக்கும் தண்டவாளத்துக்கு செல்வதுபோல் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே இருப்பதை எஞ்சின் டிரைவர் சிவசண்முகமுத்து பார்த்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு இன்டர்சிட்டி ரயிலை நிறுத்தினார்.
பின்னர் இதுகுறித்து நிலைய அதிகாரி முகேஷ்குமாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எஞ்சின் டிரைவர் தகவல் கொடுத்தார். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரு ரயில்களிலும் பயணம் செய்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இதனால் உயிர்தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications