தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது: 59 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்
கோவை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 59 லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் தேதியை நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், வாளையார் பாம்பம்பள்ளம் அருகே, திருத்தலா போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவையிலிருந்து, பாலக்காடு நோக்கி வந்துக் கொண்டிருந்த, தமிழக அரசு பேருந்தில், பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரமேஷ், பிருத்விராஜ் ஆகியோர் வைத்திருந்த பையில், 59 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை, வருமானவரித் துறையிடம் ஒப்படைத்த போலீசார், இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications