சென்னை வந்தார் ஜவடேகர்... விஜயகாந்தை இன்று சந்தித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இடம்பெற்றுள்ளது. மற்ற சில கட்சிகளும் திமுக கூட்டணியில் விரைவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கூட்டணியினர் தற்போது இரண்டு கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டு மார்ச் முதல் வாரத்தில் 3-ம் கட்ட பிரச்சாரத்தை துவக்க உள்ளனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைய துவக்கவில்லை.
தற்போதைய நிலையில் பாஜகவும் தங்கள் அணியில் இடம்பெறும் கட்சிகளை இன்னும் உறுதி செய்யவில்லை இந்நிலையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் பின்னர் பின்னரே பாஜக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். பாஜக, அதிமுக கூட்டணி குறித்த யூகத்திற்கு தற்போது பதில் கூற முடியாது என்றார். மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்










Click it and Unblock the Notifications