தேனியில் அமைகிறது நியூட்ரினோ திட்டம்... சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி!
தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
Recommended Video

டெல்லி : தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் விஞ்ஞானக் காரணங்களை காட்டி இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுச்சுழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரையை ஏற்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. திட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், வனத்துறையின் அனுமதியை பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. திட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கி.லி. தண்ணீரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications