பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... அதிர்ச்சியில் தேவகோட்டை மக்கள் - வீடியோ
காஷ்மீர் கொடியை எரித்த பாஜக தமிழ் வளர்ச்சிப் பிரிவு செயலாளர் முத்துராமன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தேவகோட்டை: தேவகோட்டையில் பாஜக பிரமுகர் வீட்டு மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசீனர். அவர் குண்டுவீச்சிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். போலீசார் குண்டு வீசிய நபர்களைத் தேடி வருகிறது.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் பாஜகவில் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாராக இருந்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி, பாகிஸ்தானின் தேசியக் கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். காஷ்மீரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்தை நடத்தினார்.

இந்நிலையில் நேற்று அவர் வீட்டு படுக்கையறை ஜன்னலை நோக்கி மர்பநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். அப்போது படுக்கையறையில் இருந்த முத்துராமன் மயிரிழையில் உயிர்தப்பினார்.
பாகிஸ்தான் கொடியை எரித்த காரணத்துக்காக அவர் மீது குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் குற்றவாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாஜக இளைஞரணி தலைவர் ஜெகன் அரிவாளால் நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications