Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீண்டாமையா? நடிகர் யோகிபாபுவுக்கு சிறுவாபுரி முருகன் கோயில் அர்ச்சகர் கை கொடுக்க மறுத்தாரா?

Subscribe to Oneindia Tamil

சிறுவாபுரி: சிறுவாபுரி முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபுவுக்கு அர்ச்சகர் ஒருவர் கை கொடுக்க மறுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ளவர் யோகிபாபு. வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சேருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் தற்போது அவருடைய கால்ஷீட்டுக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது.

Untouchability issue faced by priest for Actor Yogi Babu in Siruvapuri murugan temple?

ஹீரோவின் கால்ஷீட்டை கூட எளிதாக பெற்றுவிடலாம். ஆனால் இவருடைய கால்ஷீட்டை பெற முடியவில்லை என திரைத்துறையினர் கூறும் அளவுக்கு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வடிவேலுவை போல் வசனங்களை பேசுவதற்கு முன்பாக தனது பாடிலேங்குவேஜால் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். தர்மபிரபு எனும் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அது போல் கோலமாவு கோகிலா எனும் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து 90 ஸ் கிட்ஸ்களின் புகைச்சலுக்கு ஆளானார். இவர் நடித்த மண்டேலா படம் இவரை அடுத்த லெவலுக்கு உயர்த்தியது. காமெடியன், நடிகன் என பன்முகத் தன்மை கொண்டவராக உயர்த்தியது. அண்மையில் தோனியின் தயாரிப்பு படமான எல்ஜிஎம் படத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

இந்த படத்தில் யோகிபாபுவின் கால்ஷீட்டை பெற மிகவும் கஷ்டப்பட்டதாக தோனியே தெரிவித்திருந்தார். இவ்வாறு சூறாவளி போல் சுழன்று கொண்டிருக்கும் யோகி பாபு அவ்வப்போது முருகன் கோயில்களுக்கு செல்வதை தவறாமல் செய்து வருகிறார். முருகன் மீது அவருத்து அதீத பக்தி. அந்த வகையில் இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது.

இங்கு சுவாமி தரிசனம் செய்ய யோகிபாபு சென்றிருந்தார். அப்போது அவரை கண்டதும் ரசிகர்கள் ஓடி வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தார்கள். சாமி தரிசனம் முடித்துக் கொண்டு கழுத்தில் மாலையுடன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். அப்போது அங்கிருந்த அர்ச்சகரை சந்தித்தார். அவரை பார்த்தவுடன் யோகி பாபு கை கொடுக்க கையை நீட்டிக் கொண்டே சென்றார்.

ஆனால் அர்ச்சகரோ கையை கொடுக்காமல் தனது கையை தூக்கி ஆசி வழங்கினார். இந்த வீடியோ வைரலான நிலையில் கோயிலில் ஒரு பெரிய நடிகருக்கே தீண்டாமை கொடுமையா என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார். கையை நீட்டிய போது அவர் ஏன் கை கொடுக்கவில்லை என தெரியவில்லை, ஆனால் யோகிபாபுவுடன் சகஜமாக பேசினார். அந்த அர்ச்சகரை யோகிபாபுவுக்கு ஏற்கெனவே தெரியும் போல! இருவரும் நன்றாக பேசிக் கொண்டனர்.

இந்த வீடியோவை பலர் தீண்டாமை ஒரு பாவச் செயல் என போட்டு வைரலாக்கி வருகிறார்கள். ஆனால் யோகிபாபுவோ அந்த வீடியோவை போட்டு சிறுவாபுரி என குறிப்பிட்டுள்ளார். பேக்கிரவுண்டில் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலின் இசை ஒலிக்கிறது. இது தீண்டாமையா இல்லை வேறு ஏதாவது பிரச்சினையா என்பதை அர்ச்சகரோ அல்லது யோகிபாபுவோ விளக்கினால்தான் உண்மை புரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+