கருணாநிதியின் மாஜி குமாஸ்தா நான்.... நிறைய தகவல்களை லீக் செய்வேன்... சொல்வது வைகோ
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் குமாஸ்தாவாக இருந்தவன் நான்.. தேர்தல் நேரத்தில் பல தகவல்களை வெளியிடுவேன் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று ஆவடியில் தொடங்கியது. அங்கு வைகோ பேசியதாவது:

கருணாநிதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒரு குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கருணாநிதி எந்த கூண்டிலும் நிற்க மாட்டார்.
அதே நேரத்தில் கனிமொழி, தயாளு அம்மாள் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள். அண்ணா மறைவுக்கு பிறகு தமிழகம் நாசமாவதற்கு திமுக, அதிமுகவே காரணம். கருணாநிதிக்கு எதற்கு முதலமைச்சர் ஆசை.
1970ல் திருச்சியில் நடந்து பொதுக்கூட்டத்தில் 67 வயதான காமராஜர் ஆட்சிக்கு வர வேண்டும் என துடிக்கிறார் என்றார் கருணாநிதி. இது எல்லாம் எனக்கு தெரியும். அவரிடம் நான் குமாஸ்தா வேலை பார்த்தேன். இதுபோன்று பல தகவல்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவேன்.
ஒபாமா போலவே ஒருவர் மாறி விட்டார். 67க்கு பிறகு 2016ல் அதிசயம் நடக்கப்போகிறது. மலைபோல் இருக்கிற ராட்சத கட்சிகளை வீழ்த்தி மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் இளைய தலைமுறையை நம்பித்தான் இருக்கிறோம்.
இவ்வாறு வைகோ கூறினார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications