கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து மத்திய அரசின் அக்கிரம செயல்.. வைகோ, இளங்கோவன் காட்டம்!
சென்னை: மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்படக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் விடுமுறை நாளாகும். உலகெங்கும் உள்ள கிறித்துவப் பெருமக்கள் கொண்டாடி மகிழ்கின்ற புனிதத் திருநாளாகும். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், நவோதயா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், டிசம்பர் 25 ஆம் தேதி அன்று முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளையும், இந்து மகாசபை தலைவர் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளையும் கொண்டாடுவதற்காக நல்லாட்சி தினமாக அறிவிக்க இருப்பதால் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது அநீதியான அடாத செயலாகும். மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.சி) கீழ் இயங்கும் பள்ளிகளிலும் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
அனைத்து மதங்களையும் மதித்து, மதச்சார்பின்மையுடன் நடக்க வேண்டிய மத்திய அரசு, இந்துத்துவா கொள்கையின் ஊதுகுழலாக மாறி இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து மத்திய அரசு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மத்திய அரசின் விடுமுறை நாளாகவே கடைப்பிடித்து வந்துள்ளது.
நான் மிகவும் மதித்துப் போற்றுகின்ற முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் அன்று அவரோடு விருந்து அருந்தியவன். தற்போது கடந்த நான்கு ஆண்டு காலமாகவே அடல்பிகாரி வாஜ்பாய் மிகவும் உடல்நலம் குன்றி பேச முடியாமலும், ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அயர்ந்து தூங்குகின்றவராகவும இருந்து வருகிறார். நான் டெல்லிக்குச் செல்லும்போதெல்லாம் வாஜ்பாய் இல்லம் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். தனது பிறந்த நாள் அன்று மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து என்ற செய்தியை உணர்ந்தாலே வேதனையில் துடி துடித்துப்போவார்.
மத்திய அரசு பள்ளிகளில் கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் குடும்பங்களின் பிள்ளைகளும் படிக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, இந்துகளின் தீபாவளி பண்டிகை அன்று அனைத்து மதத்தினருக்கும் சேர்த்துத்தானே விடுமுறை அளிக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மிகவும் அக்கிரமமான செயலாகும். கிறிஸ்துமஸ் விடுமுறையை மத்திய அரசு பள்ளிகளில் ரத்து செய்யும் மத்திய அரசின் செயலுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மத்திய அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறுகையில், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நாளை கொண்டாட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகின்றன. அந்த விடுமுறையை ரத்து செய்துவிட்டு நல்லஆளுமை தினம் கொண்டாடுமாறு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications