தியாகுவுக்கு வைகோ நேரில் சென்று ஆதரவு
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி தியாகு நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு உண்ணாவிரத இடத்திற்கு நேரில் சென்ற வைகோ அங்கு தியாகுவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.
வெற்றி அல்லது வீரச் சாவு என்ற முழக்கத்துடன் தியாகு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் போய்ப் பார்த்து ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதியும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு, தியாகு தனது போராட்டத்தை விலக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வைகோ நேரில் சென்று தியாகுவைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்று முற்பகல் மீண்டும் அவர் தியாகுவைச் சந்திக்கிறார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications