20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டசபைத் தேர்தல் களத்தில் வைகோ!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு மீண்டும் சட்டசபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
வைகோ தேர்தல்களில் போட்டியிட்டது மிக மிகக் குறைவுதான். இதுவரை அவர் மொத்தமே 5 முறைதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதிமுக முறை அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருந்துள்ளார்.
வைகோ முதல முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டது 1996ல்தான். 1993ம் ஆண்டுதான் அவர் மதிமுகவைத் தொடங்கியிருந்தார். அடுத்த 3 வருடத்தில் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

விளாத்திகுளத்தில் முதல் தோல்வி
1996ல் நடந்த தேர்தலில் அவர் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் வெறும் 634 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியைத் தழுவினார்.

1996ல் சிவகாசியில் தோல்வி
அதன் பின்னர் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக லோக்சபா தேர்தலில் போட்டியிட ஆரம்பித்தார். 1996ல் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு 3வது இடத்தைப் பிடித்தார்.

2 முறை வெற்றி
இதையடுத்து 1998 மற்றும் 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் அதே சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வைகோ.

2014ல் மீண்டும் தோல்வி
2014ம் ஆண்டு அவர் மீண்டும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை அவர் விருதுநகரில் போட்டியிட்டார். இதில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது.

மீண்டும் தேர்தலில்
இந்த நிலையில் தற்போது மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு அவர் திரும்பியுள்ளார். கோவில்பட்டியில் அவர் களம் காண்கிறார். இதுவரை சட்டசபைக்குள் நுழைந்திராத வைகோவுக்கு கோவில்பட்டி வாசல் திறக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications