இவ்வளவு நாளும் கோமாவிலா இருந்தார் ப.சிதம்பரம்?... வைகோ ஆவேசம்
சேலம்: இசைப்பிரியா 2008ஆம் ஆண்டே படுகொலை செய்யப்பட்டதற்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இவ்வளவு நாளும் கோமாவில் இருந்தாரா? என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, இன்று காலை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும்.
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்கள், தமிழ் ஆர்வாளர்களின் போராட்டம் தொடரும்.
சிதம்பரத்திற்கு கோமாவா?
இசைப் பிரியா படுகொலைக்கு மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கொல்லப்பட்டது 2008 ஆம் ஆண்டு ஆனால், இப்போதுதான் சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்று முதல் இவர் கோமாவில் இருந்தாரா?.
அதேப்போல, தி.மு.க தலைவர் கருணாநிதியும், இலங்கையில் 8 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அவை பழைய புகைப்படங்கள் போல உள்ளதே? என்றார். ஆனால், அவர் தற்போது இசைப்பிரியா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கிறார். இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்றார் வைகோ.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications