தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைப்பயணம்.. கொடியசைத்து தொடங்கி வைத்தார் ஸ்டாலின்
தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார்.
Recommended Video

மதுரை: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார். இதனை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மதிப்பீட்டுக்குழு பரிந்துரை
இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம்
நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் இருந்து இன்று தொடங்கினார்.

ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இதனை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை பழங்காநத்தத்தில் இருந்து கம்பம் வரை 10 நாட்களுக்கு வைகோ நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டு
முன்னதாக தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,மோடி அரசு தமிழகத்தில் நச்சு திட்டங்களை செயல்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். மதுரையில் நியூட்னோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநில சுயாட்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதால் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications