கருணாநிதி வெளியேற்றிய சாஸ்திரியை துணைவேந்தராக நியமிப்பதா? மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதை..வைகோ வார்னிங்
தமிழ்நாடு வேட்டைக்காடா? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவர் எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மிஸ்டர் புரோகித் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்று தமிழக ஆளுநரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளர்.
டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக ஆந்திராவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ்திரியை நியமித்துள்ளார் பன்வாரிலால் புரோகித்.

இந்த நியமனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார் வைகோ. இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, தமிழ்நாட்டில் ஆளுநராக புரோகிதர் ஒருவர் வந்து அமர்ந்திருப்பதாக கூறினார்.
அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்திற்கு யாரை துணைவேந்தராக நியமனம் செய்வது? தமிழை நீச பாஷை என்று சொன்னவரையா? கருணாநிதியால் அன்றைக்கு வெளியேற்றப்பட்டவர் சூரியநாராயண சாஸ்திரி. ஆந்திராவைச் சேர்ந்தவரை தமிழ்நாட்டு சட்ட பல்கலைக்கழகத்திற்கு நியமித்தது ஏன்?
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் ஒருவரை தேர்வு செய்யாமல், விதிமுறைகளை மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கி செயல்படுகின்ற சூர்யநாராயண சாஸ்திரியை நியமனம் செய்தது ஏன்?
தமிழ்நாடு என்ன வேட்டைக்காடா? மிஸ்டர் புரோகித்... மிஸ்டர் புரோகித்... ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள் என்றும் வைகோ எச்சரித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications