காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது… வைகோ வலியுறுத்தல்
மானாமதுரை: இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது என்பது காங்கிரசின் கூட்டு சதி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என வைகோ கூறியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முதல் குரல் கொடுத்த மன்னர்கள் மருதுபாண்டியர்கள். அக்டோபர் 24-ல் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில், மருதுபாண்டியர்களின் நினைவு நாள் வியாழக்கிழமை காலை 7 மணியளவில், வாரிசுதாரர் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில் பொங்கலிட்டு, குருபூஜை நிகழ்ச்சி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெங்கலச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர்-புதூர் பூமிநாதன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்-எம்.டி.சி.சின்னசெல்லம், கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், மாநில தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில மருத்துவர் அணித் துணைச் செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
இமயம் முதல் குமரி வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரவாளை உயர்த்தியவர்களில் தென் மாவட்டங்களில் பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கையில் வேலு நாச்சியார். இவரிடம் சேனாதிபதியாக இருந்து மன்னராக உயர்ந்தவர்கள் இந்த மருதுபாண்டியர்கள். திருப்பத்தூரில் மட்டும் 570 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.
மத்திய அரசு இலங்கைக்கு பல கோடி ரூபாயை அளித்து தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டது. அங்கு போர் நடக்க இந்தியாதான் காரணம். காங்கிரஸ் கூண்டில் ஏற்ற வேண்டிய குற்றவாளி. இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தல் கண் துடைப்பு தான்.
இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடப்பது என்பது காங்கிரசின் கூட்டு சதி. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications