கல்லீரல் சுட்டுத்தின்னும் காட்டேரி! ஒன்றிய அரசு ஒன்றிவந்தால் சாராயத்தை ஒழித்துக்கட்டலாம்! -வைரமுத்து
சென்னை: மதுவை கல்லீரல் சுட்டுத்தின்னும் காட்டேரி என்று விமர்சித்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து, ஒன்றிய அரசு மட்டும் ஒன்றிவந்தால் சாராயத்தையே ஒழித்துக்கட்டிவிடலாம் எனக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஏற்கனவே பல்வேறு அமைப்பினரும் அரசை வலியுறுத்தி வரும் நிலையில், தனக்கே உரிய கவி நடையோடு ஆழமான முக்கிய பதிவு ஒன்றை வைரமுத்து வெளியிட்டிருக்கிறார்.

இதன் மூலம் மதுவில்லா தமிழகத்தையே தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
''சாராயம்
ஒரு திரவத் தீ
கல்லீரல் சுட்டுத்தின்னும்
காட்டேரி
நாம் விரும்புவது
கள்ளச் சாராயமற்ற
தமிழ்நாட்டை அல்ல;
சாராயமற்ற தமிழ்நாட்டை
மாநில அரசு
கடுமை காட்டினால்
கள்ளச் சாராயத்தை
ஒழித்துவிடலாம்
ஒன்றிய அரசு
ஒன்றிவந்தால்
சாராயத்தையே ஒழித்துவிடலாம்.''

இவ்வாறு மதுவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வைரமுத்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
விளையாட்டு அரங்குகளில் மது வணிகம் செய்ய அனுமதி, தானியங்கி இயந்திரம் மூலம் மதுபாட்டில் விற்பனை என அண்மையில் அரசு சர்ச்சையில் சிக்கிய நிலையில் இது போன்றதொரு பதிவை வைரமுத்து வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications