வால்பாறையில் நள்ளிரவு கேட்ட யானை பிளிறல் சத்தம்.. என்னனு பார்க்க வந்த அடுத்த நொடி.. பகீர் சம்பவம்
வால்பாறை: கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக யானை மனித மோதல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வால்பாறை எஸ்டேட் அருகே மூன்று யானைகள் ஊருக்குள் வந்துள்ளன. அதில் ஒரு யானையின் கால் செப்டிக் டேங்கில் சிக்கியுள்ளது. சத்தம் கேட்டு வெளியே சென்ற மக்களை அங்கிருந்த மற்றொரு யானை தாக்கியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் யானைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் வால்பாறை மலை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் முன்பை விட சமீபகாலமாக அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் பல கூட்டமாகவும், தனியாகவும் பிரிந்து குடியிருப்புப் பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை கெஜமுடி எஸ்டேட் லோயர் டிவிசன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் அப்பகுதியில் மூன்று காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளன. அப்போது அங்கு ஒரு வீட்டின் பின்புறம் எதிர்பாராத விதமாக கழிப்பிட தொட்டியில் ஒரு யானையின் கால் மாட்டியுள்ளது. யானை பயத்தில் மிரண்டு சத்தம் போட்டுள்ளது.
யானையின் சத்தம் கேட்டு மக்கள் வீடுகளின் கதவுகளை திறந்து வெளியே சென்று பார்த்துள்ளனர். அப்போது திடீரென்று வேறு ஒரு பகுதியில் இருந்து வந்த மற்றொரு காட்டு யானை மக்களை விரட்டி தாக்கியது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். சந்திரன் (62), உதயகுமார் (34), கார்த்தீஸ்வரி (40) ஆகியோர் யானை விரட்டியபோது கீழே விழுந்து கை கால் தலை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
சரோஜா என்கிற 42 வயது பெண் வீட்டின் கதவை திறந்து வெளியே நின்றுள்ளார். அவரையும் யானை தாக்கியுள்ளது இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை தாக்கிவிட்டு யானை வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. காயமடைந்தவர்களை அருகில் இருந்த மக்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், "காட்டு யானைகள் அங்கு வந்ததே எங்களுக்கு தெரியவில்லை. பொதுவாக யானைகள் வந்தால் அங்குள்ள ஏஐ தொழில்நுட்பம் மூலம் எச்சரிக்கை ஒலி மற்றும் ஒளி எழுப்புவார்கள். நேற்று அப்படி நடக்கவில்லை. தொலைபேசியிலும் தகவல் சொல்வார்கள். ஆனால் நேற்று அப்பகுதியில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனால் தகவல் வரவில்லை. வனத்துறை யானைகளை முறையாக கண்காணித்து பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்." என்றனர்.
இந்த சம்பவம் குறித்து மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். பொதுமக்களை சந்தித்தபோது மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "யானை குடியிருப்புப் பகுதிக்கு அருகில் வந்தால் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம். யானைகள் பல்வேறு பகுதிகளில் உலா வரும். மக்கள் அந்நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்ததாலே இந்த சம்பவம் நடந்துள்ளது. யானை கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்." என்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications