வண்டலூர் பூங்காவில் ஆச்சரியம்.. அதுவும் ஒரே நாளிலேயே..அங்கே மாலா, தேவா.. இங்கே ஷவர் குளியல்.. பார்ரா
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினம் தினம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகி கொண்டே போகிறதாம்.. அதிலும் நேற்று ஒரே நாளில் பூங்காவில் குவிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை ஆச்சரியத்தை தந்து வருகிறது.
இப்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயணிகள் வருகை அதிகமாகி கொண்டே போகிறது.. அதற்கேற்றவாறு, மீண்டும் வண்டலூர் பூங்காவில் 'சிங்கம் சபாரி' திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஜில் ஜில் பறவை: அதேபோல, கோடை காலம் துவங்கிவிட்டதால், இங்குள்ள உயிரினங்களும் ஜில்லென்ற சூழலில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் பறவைகளை பொறுத்தவரை, அவைகள் உள்ள கூண்டுகள் கோணி மூலம் போர்த்தப்பட்டு, அந்த கோணிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகின்றன..

மேலும், கூண்டுகளுக்கு மேல் தென்னை, பனை ஓலைகள் போடப்பட்டிருக்கின்றன. நீர்ச்சத்து உள்ள பழங்கள் இந்த பறவைகளுக்கு வழங்கப்படுகின்றன.. 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் பீய்ச்சி அடிப்பதால், குளுகுளுவென சூழலில் பறவைகள் கூண்டுக்குள் உள்ளன..
சிங்கம் புலிகள்: விலங்குகளுக்கும் இதுபோலவே, குளிர்ச்சியான சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன... யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு ஸ்பெஷலாக ஷவர்களில் அமைக்கப்பட்டுள்ளதால், அவைகள் இங்கு குஷியில் குளியல் போடுகின்றன. சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளுக்கு ஏசியில் வைக்கப்பட்ட இறைச்சி ஜில்லென்று தரப்படுகிறதாம்.. இதைதவிர, 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கால்நடை டாக்டர்கள் இந்த விலங்குகளை கண்காணித்தபடியே இருக்கிறார்கள்
ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், வண்டலூர் பூங்காவில் 2 புலிகள் இருக்கிறதாம்.. அந்த புலிகள் பெயர் தேவா மற்றும் மாலா.. இந்த புலிகள் ஹாயாக அங்கே சுற்றி திரிகிறதாம்.. கூண்டுக்கு வெளியே திரிந்தாலும், யாருக்கும் தொந்தரவு தருவதில்லையாம்.. பெண் ஊழியர் அங்கு வந்து, கூண்டுக்குள் போக சொன்னால், உடனே மாலாவும், தேவாவும் சமர்த்தாக எழுந்து நடந்து கூண்டுக்குள் போய்விடுகிறார்களாம்..
அந்த புலிகளை பெண் ஊழியர் தேவா, மாலா என்று சொல்லியே அழைக்கிறார். அவர் அப்படி கூப்பிட்டதுமே, அந்த புலிகள் திரும்பி, அந்த பெண் ஊழியரை பார்க்கின்றதாம்.. இதையெல்லாம் பார்த்து சுற்றுலா பயணிகள் பூரித்து போகிறார்கள்.. மாலாவும் தேவாவும்தான் வண்டலூரை இப்போது கலக்கி கொண்டிருக்கிறார்கள்..!!

வண்ணத்துப் பூச்சிகள்: அதுமட்டுமல்ல, வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளதாக சொல்கிறார்கள்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில், 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்திருக்கறார்கள்.
கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய்கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, யானைகளுக்கு ஷவர் குளியில் ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளதால், யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவதை பார்க்க, பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்களும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications