வன்னியர் சங்க தலைவர் நாட்டு வெடிகுண்டு வீடு படுகொலை

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் பகுதியில் வன்னியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் அகோர மூர்த்தி என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.

செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு அண்ணாமலைநகரை சேர்ந்தவர் கே.ஏ.மூர்த்தி என்கிற அகோரமூர்த்தி. இவர் வன்னியர் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளராக இருந்து வந்தார். இன்று காலை 9.30 மணி அளவில் மூர்த்தி, நண்பர் சாமியப்பனுடன் தனது மாருதி காரில் திருமண விழாவிற்கு புறப்பட்டு சென்றார்.

செம்பனார்கோவில் யூனியன் அலுவலகம் அருகே கார் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை வழிமறித்து நிறுத்தினர். அந்த சமயத்தில் பின்னால் ஒரு கார் வந்தது. அதில் 4 பேர் இருந்தனர். அவர்கள் காரில் இருந்து இறங்கினர். தங்கள் கையில் வைத்திருந்த வெடிகுண்டை மூர்த்தி மீது வீசினர். அவர் தப்பி ஓடினார்.

ஆனால் விடாமல் துரத்திப் பிடித்த அக்கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவரது நண்பர் தப்பி ஓடியதால் உயிர் தப்பினார்.

பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. வன்னியர் சங்க பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றதும் செம்பனார்கோவில் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டது. அங்கு பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+