தமிழகத்தில் மநகூட்டணி... புதுவையில் திமுக- காங். வேட்பாளர் 'நாசா'வுக்கு ஆதரவு- விசிக தடலாடி!
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிரடியாக புதுச்சேரி நெல்லித்தோப்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமகவுக்கு மாற்றாகத்தான் இடதுசாரிகள், மதிமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. ஆனால் அண்மைக்காலமாக மக்கள் நலக் கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக பிற கட்சி தலைவர்கள் மறைமுகமாக குற்றம்சாட்டிவருகின்றனர்.

மதிமுகவினரும் விடுதலைச் சிறுத்தைகள் இல்லாத மக்கள் நலக் கூட்டணியையே விரும்புவதாக கூறிவருகின்றனர். மக்கள் நலக் கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் இருப்பது பகிரங்கமாக வெடித்து வருகின்றன.
இந்த நிலையில் அதிரடியாக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் அம்மாநில முதல்வர் நாராயணசாமியை ஆதரிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.
புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தை இன்று சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் இதற்கான ஆதரவு கடிதத்தை அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரவிக்குமார், எங்களுடைய இந்த முடிவு குறித்து இடதுசாரிகள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இது தமிழகத்துக்கு பொருந்தாது. அத்துடன் நாராயணசாமியை ஆதரித்து நெல்லித்தோப்பு தொகுதியில் திருமாவளவன் பிரசாரம் செய்வார் என்றும் தெரிவித்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications