காவிரி டெல்டாவில் கால் வைக்கிறது வேதாந்தா.. 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி!!
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.
Recommended Video

சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம், ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை முறையாக மத்திய அரசோ, வேதாந்தா நிறுவனமோ வெளியிடவில்லை.

ஜெம் கைவிட்டது
முதலில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனம் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஆனால் மக்கள் தொடர்ச்சியாக இதற்கு எதிராக போராடி வந்தனர். இதனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்குமாறு ஜெம் நிறுவனம், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தது. டெல்டா பகுதியில் இந்த திட்டத்தை கைவிட்டது ஜெம் நிறுவனம்.

வேதாந்தா கைப்பற்றியது
தற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. டெல்டா பகுதிகளில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. ஆனால் எந்த இடங்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
|
இந்தியா முழுக்க
மத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். இந்தியா முழுக்க 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. அதில் தமிழகத்தில் இரண்டு இடங்கள் தேர்வாகி உள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி ஹைட்ரோ கார்பன் எடுக்கும்.

பெரிய அதிர்ச்சி
ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம், ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை காரணமாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காயங்கள் ஆறும் முன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications