ரகசியமாக 2 மனைவிகள்..கும்பகோணம் வீரசைவ பெரியமடாதிபதி மீது 'புதுமாப்பிள்ளை' இளையமடாதிபதி பகீர் புகார்
சென்னை: கும்பகோணம் வீரசைவ பெரிய மடாதிபதிக்கு ரகசியமாக 2 மனைவிகள் இருப்பதாக நீக்கப்பட்ட இளையமடாதிபதி கங்காதரன் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் உள்ளது வீரசைவ பெரியமடம். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள லிங்காயத்துகளின் கட்டுப்பாட்டில் இந்த மடம் செயல்படுகிறது.
இம்மடத்தின் 97வது பீடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள். 2012ல் பெங்களூருவை சேர்ந்த கங்காதரன் என்பவர் இந்த மடத்தின் 98வது பட்டத்தில் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜூனில் மாயமான ஜூனியர்
கடந்த ஜூன் 6ம் தேதி கங்காதர சுவாமிகள் திடீரென மடத்தில் இருந்து காணாமல் போய்விட்டார். இது குறித்து நீலகண்ட மகா சுவாமிகள் பெங்களூருவில் உள்ள தலைமையகத்துக்கு தெரியப்படுத்தினார்.

துறவறத்துக்கு டாட்டா
அப்போதுதான் உறவு பெண்ணான மமதா என்பவரை கங்காதரன் திருமணம் செய்து கொண்டது அம்பலமானது. இதனால் இளையமடாதிபதி பதவியில் இருந்து கங்காதரனை டிஸ்மிஸ் செய்து பெரியமடாதிபதி உத்தரவிட்டார்.

2 வருஷமா போலி துறவி
அத்துடன் 2014-ம் ஆண்டே கங்காதரன் திருமணம் செய்து கொண்டார் என்ற ஆவணங்களும் கிடைத்திருக்கிறது; 2 ஆண்டுகளாக துறவி போல் வீரசைவ மடத்தில் நாடகமாடி வந்திருக்கிறார் என்றெல்லாம் கங்காதரன் மீது பெரிய மடாதிபதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பணம் கேட்ட பெரியவர்
இந்த நிலையில் தம் மீதான புகார்கள் குறித்து விளக்கம் அளித்த கங்காதரன் பகீர் தகவல்களை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், மட பீடாதிபதியாக இருக்கும் நீலகண்ட சுவாமிகள், என் மீது அவதூறு பரப்பி வந்தார். அவர் மடத்தின் பணத்தை கேட்டு அடிக்கடி டார்ச்சர் செய்தார். கடந்த பிப்ரவரி மாதம் மனைவிக்காக ரூ.25 லட்சம் தரும்படி கேட்டார். பணத்தை தராவிட்டால் உன்மீது மேலும் அவதூறு பரப்புவேன் என்றார்.

2 திருமணங்கள்.. ப்ளஸ் ஒரு அட்டெம்ப்ட்
நான் அவரைப்பற்றி விசாரித்தபோது அவருக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் பங்காருப்பேட்டையில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் தான் அவர் பணம் கேட்டு டார்ச்சர் செய்தார். ஏற்கனவே இவர் பங்காருபேட்டை மடத்தில் இருந்தபோது ஒரு பெண்ணிடம் முறைதவறி நடந்ததாக புகார் உள்ளது.
நான் இப்போது குடும்பஸ்தனாக மாறிவிட்டேன். என் மனைவி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலையில் கன்னட மொழித்துறை தலைவராக இருக்கிறார் என்றார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications