துணை ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக சென்னை வந்தார் வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதியான பிறகு, முதல் முறையாக சென்னை வந்துள்ளார் வெங்கையா நாயுடு.
சென்னை: நாட்டின் துணை ஜனாதிபதியாக பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்க விழாவில் கலந்து கொள்வதற்காக வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகை தந்தார்.
மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியான பிறகு, அவர் முதல்முறையாக சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார் வெங்கையா நாயுடு. அங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
அதன்பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அண்ணா பல்கலைகழக வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ள விழாவை தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர், அண்ணா பல்கலைகழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார்.
துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி, சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிக்குபின் இன்று மாலையே வெங்கையா நாயுடு டெல்லி செல்கிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications