"நான்தான்மா விஜய்.." யாரென தெரியாமல் விழித்த மூதாட்டி! அடுத்து நடந்த செம க்யூட் சம்பவம்! வாவ்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தென்மாவட்ட மக்களுக்கு விஜய் நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில், அப்போது அங்கே நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் தென்மாவட்டங்களில் மிகக் கடுமையான கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 Vijay Nellai Visit A old lady failed to identify Thalapathy when he was giving flood relief material in Nellai

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பில் ஏற்கனவே நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல பல்வேறு அமைப்புகளும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

விஜய்: தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் இதில் விஜய் நேரடியாகக் கலந்து கொண்டார். முதலில் இவரே நிவாரணம் வாங்கும் மக்களிடம் நேரடியாகச் சென்று பொருட்களை வழங்கினார். இருப்பினும், ஒரு கட்டத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதாலும் நேரம் தாமதமானதாலும், பின்னர் விஜய் ஒரு இடத்தில் நின்று கொள்ளப் பொதுமக்கள் வரிசையாக வந்து உதவி பொருட்களை வாங்கினர். அப்போது பல்வேறு சுவாரசிய மற்றும் நெகிழ்ச்சி சம்பவங்கள் நடந்தது. விஜய்யை நேரில் பார்த்ததும் ஒரு பெண் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

மற்றொரு பெண் அத்தனை நேரம் வரிசையில் நின்று விஜய் அருகே நின்று செல்பி மட்டும் எடுத்தார். உதவி பொருட்கள் வேண்டாமா என விஜய் கேட்டதற்கு "வேண்டாம்.." என மறுத்துவிட்டார். அத்தனை பேர் வரிசையில் நிற்க இந்த பெண் இப்படிச் செய்யும் போது விஜய் அதிருப்தி அடைந்ததை அவரது முகத்தில் பார்க்க முடிந்தது. அதேநேரம் அவர் எதுவும் சொல்லவில்லை.

நெகிழ்ச்சி:
அதேபோல அங்கே நடந்த மற்றொரு நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது. விஜய் பொதுமக்களுக்கு வரிசையாக நிவாரண பொருட்களை வழங்கி வந்தார். அப்போது வயதான அம்மா மெல்ல நடந்து வந்தார். அவர் அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி விஜய்யைத் தாண்டி சென்றார். அவருக்கு விஜய் யார் என்று தெரியவில்லை. இதனால் வணக்கம் வைத்தபடி அங்கே அப்படியே சென்றார்.

விஜய் நிவாரண பொருட்களைக் கையில் எடுத்து அந்த பெண்ணுக்குக் கொடுக்க ரெடியாக இருந்தார். அப்போது புரியாமல் குழம்பிப் போகவே, அப்போது விஜய் கொடுத்த ரியாக்ஷன் செம.. புன்முறுவல் உடன் அவரை பார்க்க. உடனே அருகில் இருந்த விஜய் ரசிகர்கள் அந்த வயதான அம்மாவை விஜய் அருகே அழைத்து வந்தனர்.

விஜய் செய்த "தரமான" சம்பவம்.. நிவாரணம் வழங்கும் போது நெகிழ்ச்சி! பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்

நான்தான்மா விஜய்: பிறகு விஜய்க்கு வணக்கத்தை வைத்துவிட்டு நிவாரண பொருளை வாங்கினார். அப்போது அருகே இருந்த புஸ்ஸி ஆனந்த்திடம் அந்த பெண் ஏதோ கேட்டார். புஸ்ஸி ஆனந்த் ஏதோ சொல்ல வர.. அப்போது "நான்தான்மா விஜய்" என்று விஜய் கூற அந்த இடமே நெகிழ்ச்சிகரமாக ஆனது. அனைவரது முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிந்தது. பிறகு விஜய்க்கு முத்தம் கொடுத்த அந்த பெண் ஆரத் தழுவி "நல்லா இரு ராசா" என்று வாழ்த்தினார்.

அதன் பிறகு நிவாரண பொருளை அந்த வயதான அம்மாவால் தூக்க முடியவில்லை. விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் இதைக் கவனித்த நிலையில், உடனடியாக அவர்கள் ஓடி வந்து அந்த பெண்ணுக்கு உதவினர். காலை முதல் துளியும் சிறிதும் இடைவெளி இல்லாமல் விஜய் உதவி பொருட்களை வழங்கி வரும் நிலையில், இந்தச் சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இது குறித்த வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+