விஜய் செய்த "தரமான" சம்பவம்.. நிவாரணம் வழங்கும் போது நெகிழ்ச்சி! பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு விஜய் நிவாரணங்களை வழங்கி வரும் நிலையில், அங்கே அவர் செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசியலில் இருக்கும் பல முக்கிய தலைவர்களும் சினிமாவில் இருந்து வந்தவர்களே அல்லது சினிமா துறைக்கு எந்தவொரு விதத்திலும் தொடர்புடையவர்களே. அண்ணா, கருணாநிதி தொடங்கி கமல் வரை சினிமா துறையுடன் ஏதோ ஒரு தொடர்பு வைத்து இருந்தவர்கள் தான்.

இந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்பதே இங்கே பரவலாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அவரது செயல்பாடுகளும் அரசியலை நோக்கியே இருக்கிறது.
விஜய்: அவர் தேர்தலில் வாக்களிக்க வருவதே கூட மிகப் பெரிய ஊடக கவனத்தைப் பெறும். அதைச் சுற்றிலும் மிகப் பெரிய விவாதங்களும் எழும். கடந்த முறை அவர் சைக்கிளில் வாக்களிக்க வந்ததும் விவாதத்தைக் கிளப்பத் தவறவில்லை. அதைத்தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதற்கு முன்பும் கூட விஜய் ரசிகர்கள் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வென்றுள்ள போதிலும், இந்த முறை தான் விஜய் படத்தையும், விஜய் மக்கள் இயக்க கொடியைப் பயன்படுத்தவும் முதல்முறையாக அனுமதி தரப்பட்டு இருந்தது. இது விஜய்யின் அடுத்தகட்ட திட்டம் அரசியல் தான் என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக இருந்தது. இந்தத் தேர்தலில் வென்றவர்களை அழைத்து விஜய் போட்டோவும் எடுத்துக்கொண்டார். இதெல்லாம் அவரது அரசியல் வருகையை உறுதி செய்யும் விதமாகவே இருந்தது.
"அண்ணன் விஜயகாந்த் எனக்கு செய்த உதவி.." நெகிழ்ச்சியாக பேசிய நடிகர் விஜய்.. டிரெண்டாகும் பழைய வீடியோ
கப் முக்கியம்: குறிப்பாகச் சமீபத்தில் நடந்த லியோ வெற்றி விழாவில் 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த கேள்விக்கு "கப் முக்கியம்" என்று அவர் சொன்னது மேலும் பரபரப்பைக் கிளப்பியது. இது மட்டுமின்றி தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் பிறந்த நாட்களுக்கு வாழ்த்து சொல்வது, படிப்பகங்களை ஆரம்பிப்பது போன்ற செயல்களிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் விஜய் செய்த செயல் பலரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நான்கு மாவட்டங்களில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது. பலரும் இந்த மழை வெள்ளத்தால் வீடுகள், வாகனங்கள் என அனைத்தையும் இழந்தனர்.
விஜய் மக்கள் இயக்கம்: இதற்கிடையே விஜய் மக்கள் இயக்கம் சார்பிலும் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சுமார் 1500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள மண்டபத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்ற விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக மண்டபத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு ரசிகர்கள் பொதுமக்கள் மிகப் பெரிய வரவேற்பு கொடுத்தனர்.
பாராட்டு: இதில் நிவாரணம் வழங்கும் போது விஜய் செய்த செயல் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ள தொகுப்பு வழங்கப்பட்டது. விஜய் நேரடியாக அவரது கையால் வழங்கினார். அப்போது சிலர் மேடைக்கு வர முயன்ற நிலையில், அவர்களை மேடைக்கு வர வேண்டாம் நானே வருகிறேன் எனச் சொல்லி ஒவ்வொருவரிடமும் நேரடியாகச் சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்.
டிராலியில் நிவாரண பொருட்களை வழங்கிய அவர், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கினார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் பொதுவாக மேடையில் நின்று கொண்டு மக்களை வரவழைத்துத் தான் நிவாரண பொருட்களைத் தருவார்கள். அப்படிச் செய்யாமல் விஜய் அவர்கள் இருக்கைக்கே சென்று நிவாரணத்தை வழங்குவதாக அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications