தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதா?.. ஆதாரங்களை வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு தமிழகத்தை விட்டு சென்றுவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் தமிழகத்திற்கு வந்த எந்த தொழில் முதலீட்டு நிறுவனமும் வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தன செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றிருப்பதாக சுரேஷ் சம்பந்தம் ட்வீட் செய்துள்ளார். ஆனால், அதுதொடர்பாக தமிழ்நாட்டுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. ஆந்திரப் பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், ஆப்பிள் ஐபோன் உறைகளுக்காக உயர்தர அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் பொருட்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tamil Nadu Investments

மேலும், ஆந்திரப் பிரதேசம் இத்திட்டத்தை மின்னணு பாகங்கள் உற்பத்தித் துறையின் கீழ் வகைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2020-2021ஆம் ஆண்டில் ஹைட்ரோ நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தப்பட்ட அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் ஆலையை குப்பத்தில் இன்டல்கோ நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த ஆலையில் எக்ஸ்ட்ரூஷன், மேற்பரப்பு, மெருகூட்டல் மற்றும் புனரமைப்பு வசதிகள் ஏற்கனவே உள்ளன.

இதனால், வேறு இடத்தில் புதிய ஆலையை அமைப்பதை விட, தற்போதுள்ள ஆலையை விரிவாக்கம் செய்வது எளிதாகவும் விரைவாகவும் உள்ளது. இது ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் ஆலையின் விரிவாக்கத் திட்டமே தவிர, புதிய முதலீட்டு மாற்றம் அல்ல. எந்தவொரு தொழில் முதலீடுகளும் ஆந்திராவிற்கு செல்லவில்லை. மாறாக, புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சியில் 80 நாட்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய ஆட்சியில், ஆட்சியமைத்த 30 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இருந்து வெளியேறக்கூடிய சூழ்நிலையில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழகத்தில் நீடிக்கும் வகையில் உறுதியளித்துள்ளோம். மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் ஹூண்டாயின் முதலீடுகளை தொடர்ந்து செயல்பட வைத்துள்ளோம். மேலும், இரண்டு நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் வெளியேறிய முதலீடுகளை, தற்போதைய ஆட்சியில் வெளியேறியதாக குற்றம்சாட்டுகின்றனர். எங்களது ஆட்சியில் தமிழகத்தின் முதலீடுகள் எங்கும் செல்லவில்லை. முந்தைய ஆட்சியில் தொழில் துறையில் ஊழல் மற்றும் தாமதம் இருந்ததாகவும், அதனால் சில முதலீடுகள் வெளியேறியதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

இந்த ஊழலைத் தடுப்பதற்காகவே 21 நாட்களுக்குள் தொழில் அனுமதிகளை வழங்கும் முறையை அமல்படுத்த உள்ளோம். ஊழல் குறித்த புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் அனுமதிகளைப் பெறுவதற்குக் கூட பணம் கொடுக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், இதனை முற்றிலும் ஒழிப்பதற்காகவே இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு தமிழகத்தை விட்டு சென்றுவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் தனது நான்காவது ஆலையை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளது. அப்பலோ டயர் நிறுவனம் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த 40 நாட்களில் தமிழகத்திற்கு வந்த எந்த தொழில் முதலீட்டு நிறுவனமும் வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை என்று அமைச்சர் கீர்த்தனா உறுதிபட தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+