எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு குறைந்தது.. அமெரிக்காவில் இருந்து வந்த குட்நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் 45 நாட்கள் கழித்து கேஸ் புக் செய்தாலும், 15 முதல் 20 நாட்கள் கழித்துதான் சிலிண்டர் வீட்டுக்கு டெலிவரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது 45 நாட்கள் கழித்து புக் செய்தாலும், 24 முதல் 48 மணி நேரத்திற்குள் சிலிண்டர் வந்து சேர்ந்து வருகிறது.

குறிப்பாக பெங்களூர் போன்ற பெருநகரங்களில் சிலிண்டர் டெலிவரி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் எரிவாயு தேவை அதிகமாக இருந்த நிலையில், சப்ளையும் குறைவாக இருந்தது. இதனால் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.

LPG cylinder LPG cylinder shortage India US LPG imports India LPG delivery time reduced India LPG import record June Hormuz Strait LPG crisis LPG shortage eased India US LPG supply to India Cooking gas shortage India LPG import from America India LPG supply improvement

ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டதோடு, அமெரிக்காவில் இருந்து எரிவாயு இறக்குமதியை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஏன் அதிகரித்தது?

ஈரான்-இஸ்ரேல் மோதல் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்தியாவின் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தியா தனது எல்பிஜி இறக்குமதியில் 90% மத்திய கிழக்கு நாடுகளை நம்பியிருந்தது. ஆனால் போர் காரணமாக இறக்குமதி ஏப்ரல் மாதம் 6.96 லட்சம் டன்னாக குறைந்தது.

இதை ஈடுகட்டும் வகையில், அமெரிக்காவில் இருந்து எல்பிஜி இறக்குமதியை அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் இருந்து 10 லட்சம் மெட்ரிக் டன் எல்பிஜி இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு அளவீடுகளின் அதிகபட்ச அளவாகும்.

மத்திய அரசின் நடவடிக்கை

மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதோடு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம் எரிவாயு தட்டுப்பாட்டை குறைக்க முயற்சி செய்து வருகிறது. இதன் விளைவாக, இப்போது பெரும்பாலான இடங்களில் கேஸ் புக் செய்த 1-2 நாட்களில் டெலிவரி கிடைத்து வருகிறது.

இந்த மாற்றம் அடுத்த சில வாரங்களில் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைமை சீரடைந்தால், இறக்குமதி இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+