கன்னியாகுமரியில் கல்யாணமான 25 நாளில்.. வரதட்சணையாக கொடுத்த 25 பவுன் தங்க நகைகளை திருப்பி கேட்ட தாய்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மீனவ கிராமத்தை சேர்ந்த 34 வயது இளைஞருக்கும், அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுத்துள்ளார் தாய். ஆனால் கடனை அடைக்க பெண் நகையை அடமானம் வைக்க தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த இளம் பெண்ணின் தாய், மகளின் திருமணத்துக்கு கொடுத்த நகைகளை திரும்பிக்கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்க போய்விட்டார். இறுதியாக கோபம் அடைந்த மகள், எடுத்த அதிரடி முடிவினை பார்ப்போம்.

திருமணத்தின் போது, பெண் வீட்டார் விரும்பியோ அல்லது விரும்பாமல் சமூகத்தின் பார்வைக்காகவோ வரதட்சணை தருவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. உங்கள் பெண்ணுக்கு நீங்கள் தருகிறீர்கள் என்று கூறும் மாப்பிள்ளை வீட்டார், நகை, பணம் போன்றவற்றை வாங்கி கொள்கிறார்கள்.

A mother in Kanyakumari demanded the return of the gold jewellery given for her daughter s wedding

இதனால் பெண் நன்றாக இருக்க வேண்டுமே என்று நினைத்து பெண் வீட்டாரும் பணம், நகை, குடும்பம் நடத்த தேவையான டிவி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தட்டுமுட்டு சாமான்கள், பாத்திரங்கள், வாகனங்கள் என்று அள்ளி அள்ளி தருகிறார்கள். தீபாவளி சீர், ஆடி சீர், பொங்கல் சீர், குழந்தை பிறந்தால் சீர், காது குத்து சீர் என பல வகையில் வரதட்சணை வாங்கப்படுகிறது. இது ஏழை, பணக்காரன் என்று இல்லை.. எல்லா மட்டத்திலும் நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மகளுக்கு வரதட்சணையாக கொடுத்த நகையை அவரது தாய் திரும்ப கேட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த பஞ்சாயத்து போலீஸ் வரைக்கும் போயிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 34 வயது இளைஞருக்கும், அருகில் உள்ள மற்றொரு மீனவ கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் திருமணமான சில நாட்களுக்கு பிறகு மகளின் நகைகளை தாயார் திருப்பிக் கேட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை அவரும் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் உறவினர்கள் சிலருடன் மகளின் வீட்டுக்கு சென்ற அவரது தாயார், வரதட்சணையாக கொடுத்த அனைத்து நகைகளையும் திரும்பிக்கேட்டு அடம் பிடித்து தகராறில் ஈடுபட்டாராம். ஆனால் நகைகளை தர மறுத்த மகள், அவரது தாயார் மீது குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்கமாக மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக பெண் வீட்டார் புகார் அளிப்பார்கள். ஆனால் வரதட்சணையாக கொடுத்த நகைகளை திருப்பி கேட்டு ஆடம்பிடித்ததாக தனது தாயார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுப்பெண் கொடுத்த புகார் குளச்சல் மகளிர் போலீசாருக்கு பெரும் தலைவலியானது.

எனினும் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். அதன்படி நேற்று புதுப்பெண்ணின் தாயார் உறவினர்களுடன் காவல் நிலையத்துக்கு வந்தார். அதேபோல் புதுப்பெண்ணும், அவரது கணவருடன் வந்திருந்தார். அப்போது புதுப்பெண்ணின் தாயார், தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி மகளின் திருமணத்தை நடத்தி வைத்தேன். மகளை நம்பி கடன் வாங்கிய நிலையில் தற்போது கடனை அடைக்க நகைகளை திரும்ப கேட்டபோது நகைகளை தராமல் மகள் என்னை ஏமாற்றி விட்டார் என்றார். மேலும் மருமகனும் திருமணத்தின் போது சில விஷயங்களை மறைத்து விட்டதாகவும் கூறினார். ஒரு கட்டத்தில் தனது மகள், மருமகனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது புதுப்பெண், தனது காதில் கிடந்த கம்மலை கழற்றி தாயாரிடம் கொடுத்தார். பின்னர் திருமணத்தின்போது வாங்கிய அனைத்து நகைகளையும் கொடுத்துவிட்டேன். வேறு நகைகள் எதுவும் தன்னிடம் கிடையாது , எனது தாயின் வசம் உள்ள தனது ஆதார் கார்டு, சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுத்தருமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அவற்றை தருவதாக தாயாரும் போலீசாரிடம் கூறினர். இதனிடையே புதுப்பெண்ணின் தாயிடம் நீங்கள் கொடுத்த வரதட்சணையை திரும்ப கேட்பது முறையல்ல, வரதட்சணை விவகாரம் என்பதால் நீதிமன்றத்தை நாடி தீர்வு பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி இருதரப்பினரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+