மோடி இருக்காரு..TVK காலி! ஆண்டவனே நினைச்சாலும்..6 மணிக்கு மேல விஜய் ஆட்டோ ஓடாது! அதிமுக மாஜி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மோடி இருக்கிறார்.. 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது கூட்டு குழுவுக்கு சென்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கருத்து வேறுபாடு இருக்கக்கூடிய வேளையில் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் வரக் கூடும் எனவும், எனவே 3 ஆண்டுகளில் கூட ஜோசப் விஜய் ஆட்சி மாறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

RB Udhayakumar TVK vijay

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்," தவெக இப்போது தான் ஆட்சிக்கு வந்து நிலையில், அதிமுக - திமுக கட்சியில் இருக்கக்கூடிய கட்டமைப்பை கொண்டு வர வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

ஆர்பி உதயகுமார்

இந்த நிலையை உணர்ந்த அவர்கள் பிற கட்சியில் இருக்கக்கூடிய கட்டமைப்பை ஆட்டையை போடுவது தான் தமிழக முதல்வராக இருக்கக்கூடிய ஜோசப் விஜய் அவர்களின் களவாணித்தனம். அண்ணா தொழிற்சங்கத்தில் இருந்த கமலக்கண்ணன் இப்போது தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று விட்டார். உண்மையான விசுவாசம் மிக்க எந்த ஒரு தொண்டனையும் அசைக்க முடியாது.

அதிமுக ஆட்சி

எத்தனையோ சோதனைகளைத் தாண்டி எந்த இயக்கத்தை வலிமையோடு நடத்துகிற வழியில், அவருடைய கரத்தை வலுப்படுத்தும் வகையில் 82 கழக மாவட்டங்கள், 38 வருவாய் மாவட்டங்களில், மூன்று மாவட்டச் செயலாளர்கள் இருக்கக்கூடிய இந்த மதுரை மாவட்டம் இருந்து வருகிறது அதிமுக ஆட்சி அமைக்காதது கூட கவலை இல்லை.

தவெக

ஆனால் எம்எல்ஏக்கள் விலை போவது தான் வேதனையாக இருக்கிறது, தகுதி பார்த்து மக்கள் சேவையை பார்த்து மக்களுக்கு அறிமுகமாகிய அவர்களை பார்த்து தேர்வு செய்தவர்கள், இங்கு வருபவர்களை எல்லாம் அங்கே சட்டமன்ற உறுப்பினர்களாகிய அமைச்சர்களாகி இருக்கிறார்கள். மதுரையில் இருக்கக்கூடிய அமைச்சர் (நிர்மல் குமார்) அதிமுகவை குறித்து பேசும்போது எங்களது நெஞ்சம் பொறுக்க மறுக்கிறது. வரலாறு என்ன மறந்து போய்விட்டதா?

அதிமுக

எனது வீட்டிலும் அமைச்சர்கள் வீட்டிலும் எத்தனை முறை அவர் நின்று இருப்பார் என்று அவர் மறந்துவிட்டாரா? எடப்பாடியின் காலை பிடித்து கையை பிடித்து காரியம் சாதித்தவர்கள் தான் இன்று ஓடிப் போய்விட்டார்கள். அங்கே போய் நீங்கள் டயரை துடைத்து விடுங்கள். அங்கே போன பிறகு அதிமுகவினர் குறித்து நீங்கள் பேசக்கூடாது. GEN Z தலைமையிலான இளைஞர்களை மூளைச்சலவை செய்ததன் காரணமாகத்தான் இன்று தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.

விஜய்

ஜோசப் விஜய் முதல்வராக அரியணை இல்லாமல் இருந்திருக்கிறார் நாளை 6:00 மணிக்கு மேல் நம்முடைய முதலமைச்சரை வெளியில் ஆண்டவனே நினைத்தாலும் அழைத்து வர முடியாது. சனி ஞாயிறு விடுமுறை எடுக்கக்கூடிய அமைச்சர் தான் நம்முடைய முதலமைச்சர். கொடுத்த வாக்குறுதிகளுக்கு பதில் கூற தயாராக இல்லை இந்த ஆட்சி யாருக்கும் நிரந்தரம் இல்லை. இதைத்தான் அன்றைக்கு நாங்கள் திமுகவிற்கும் சொன்னோம்

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஸ்டாலின் அவர்களே விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி செய்யும் உங்களது ஆட்சி நீடிக்காது என்று நாங்கள் சொன்னோம். மோடி இருக்கிறார். 2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட்டு அது கூட்டு குழுவுக்கு சென்றுள்ளாது. நாடு முழுவதும் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனும் விவாதங்கள் நடைபெற்ற நிலையில் 90% ஆதரவு பெற்று இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கருத்து வேறுபாடுடன் இருக்கக்கூடிய வேளையில், மூன்று ஆண்டுகளுக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் வரக் கூடும். எனவே மூன்று மாதங்கள் அல்ல மூன்று ஆண்டுகளில் கூட ஜோசப் விஜய் ஆட்சி மாறும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+