விஜய் நீ யோக்கியமா.. நாக்கை துருத்தி ஒருமையில் கொந்தளித்த செல்லூர் ராஜூ

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருகிறார்கள். இதனால் தவெக, அதிமுக நிர்வாகிகள் இடையே கடுமையான மோதல் உருவாகி வருகிறது. விஜய்யின் பேச்சில் கடுப்பான செல்லூர் ராஜூ நாக்கை துருத்தி கொண்டு ஒருமையில் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "வாயில் வந்ததையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல. முதலமைச்சர் விஜய் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒரு தலைமுறையையே விஜய் பாழ்படுத்தி கொண்டிருக்கிறார். ஒரு சட்டமன்ற வரலாற்றில் முதலமைச்சருக்கு ஒரு தகுதியுள்ளது. ஒரு நடிகராக பேசுவது வேறு. முதலமைச்சராக பேசுவது வேறு. சட்டமன்றத்தில் உரையாற்றும் போது மிகவும் நாகரீகமாக பேச வேண்டும். ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் ஆகியோர் அந்த நாற்காலியில் அமர்ந்துள்ளனர்.

ADMK Sellur Raju

நீயே ஒரு களவாணி

சட்டமன்றத்தில் இவரை போல யாராவது பேசியுள்ளார்களா. சட்டமன்றத்தில் செய்கை காண்பிப்பது எல்லாம் காரியம். அது சட்டமன்றமா, சந்தக்கடையா. பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவு வரவேண்டும் தோழா என்று எங்கள் தலைவர் சொன்னதுடா. என் தலைவரை உச்சரிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நீ என்ன அரைவேக்காடு தனமாக சட்டமன்றத்தில் என்ன பேசுகிறாய். நீ என்ன பரம யோக்கியனா விஜய்.

நான் உன்னை கை நீட்டி பேசுகிறன். மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே நீ யோக்கியமானவர் என்று சொல்ல முடியுமா. ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்கினாய். அதில் எவ்வளவு வெளியே சொன்னாய். நீ நடித்த புலி படத்திற்கு ரூ.15 கோடி வாங்கி குறைந்த கணக்கு காண்பித்து, ரூ.1.5 கோடி அபராதம் கட்டியது மறந்துவிட்டதா. நீயே ஒரு களவாணி. உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நீ ஒரு விரலில் சுட்டி காட்டலாம்.

அரசியலைவிட்டே ஓடும் நிலை

உனக்கு வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய கார் எப்படி வந்தது. அந்த காரை இறக்குமதி செய்வதில் மோசடி செய்ததற்கு நீதிமன்றம் அபராதம் விதிக்கவில்லையா. அப்ப நீ யோக்கியமானவனா. கரூரில் இறந்த 41 குடும்பங்களுக்கு அரசு வேலையை கொடுத்தீர்கள். அதற்கு முன்பு இறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அவர்களுக்கு கொடுக்கவில்லையா. இனிமேல் விபத்தில் இறப்பவர்களுக்கு, வெள்ளத்தில் இறப்பவர்களுக்கு எல்லாம் அரசு வேலை கொடுப்பியா.

பின்னால் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அரைவேக்காடுதனமாக செயல்பட்டுள்ளார். இரண்டு கட்சிகளையும் ஓடு ஓடு என்கிறார். நீதான் ஓட வேண்டும். அரசியலை விட்டே விஜய் ஓடும் காலம் இருக்கும். அன்றைக்கு அதிமுக பவரில் இருக்கும். இங்கிருந்தே சிலர் போயிருப்பான். அவர்களை பற்றி கவலை இல்லை. அவர்கள் திரும்பி வந்தாலும் வரலாம். வரவர்களை எல்லாம் சேர்த்து கொள்கிறீர்கள். அவர்கள் யோக்கியமா. நீங்கள் யோக்கியமா" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+