மனைவியின் முகத்தை கடைசியாக காண கிளம்பிய கணவன்! பெங்களூரு லாட்ஜில் ரூம் போட்டது ஏன்? பகீர் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஆலப்புழாவை சேர்ந்த கர்ப்பிணி மனைவி ஹரிஷ்மா தற்கொலை செய்துகொண்ட செய்தி வெளிநாட்டிலுள்ள கணவனுக்கு சொல்லப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் சானுகுட்டன், உடனடியாக ஃபிளைட் பிடித்து பெங்களூரு வந்தார்.. ஆனால், அங்கு நடந்த சம்பவம்தான் ஒட்டுமொத்த கேரளா மக்களை அதிர வைத்து வருகிறது.. இந்த சம்பவம் குறித்து பெங்களூரு காவல் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது?

ஆலப்புழா மாவட்டம் எடத்துவா பகுதியை சேர்ந்தவர் சானுகுட்டன்.. இவருக்கு 30 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஹரிஷ்மா.. 27 வயதாகிறது.. மாவேலிக்கரை உம்பர் நாடு பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்மா, தனது வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்குத் திருமணம் நடந்து 4 மாதங்கள்தான் ஆகிறது.

Husband

ஆலப்புழா கர்ப்பிணி மனைவி

தற்போது ஹரிஷ்மா 3 மாத கர்ப்பிணி ஆவார்.. ஆனால், தன்னுடைய வேலை விஷயமாக சானுகுட்டன் தோஹாவுக்கு செல்ல வேண்டியதாயிற்று,. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் தோஹா கிளம்பி சென்றார்.. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஹரிஷ்மா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தத் தகவல் தோஹாவில் இருந்த சானுகுட்டனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சொந்த ஊருக்கு கிளம்ப முடிவு செய்தார்.. இதற்காக தோஹாவிலிருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார்.. பெங்களூருவில் இருந்து இணைப்பு விமானம் மூலம் நெடும்பாசேரி ஏர்போர்ட்டுக்கு வந்து, அங்கிருந்து வீட்டிற்கு வந்துவிடுவதாக தன்னுடைய உறவினர்களுக்கும் சானுகுட்டன் தகவல் தந்தார்.

பெங்களூர் ஏர்போர்ட்

எனவே, சானுகுட்டனை அழைத்து வருவதற்காக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் நெடும்பாசேரி ஏர்போர்ட்டுக்கு கிளம்பி சென்றார்கள்.. குறிப்பிட்ட நேரத்தில் அந்த விமானமும் நெடும்பாசேரி வந்தடைந்தது. ஆனால், அந்த ஃபிளைட்டில் சானுகுட்டன் வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது..

சொந்தக்காரர்கள் பலமுறை முயற்சி செய்தும், செல்போன் நம்பர் கிடைக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள், பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது, சானுகுட்டன் தோஹாவிலிருந்து பெங்களூரு வந்து இறங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பெங்களூரு வந்தவர் எங்கே போயிருப்பார்? என்று குழம்பி பானார்கள்.. அதற்கு பிறகு அவர் எங்கு சென்றார் என்ற தகவலும் தெரியாமல் தவித்தனர்.. இதனால் பெங்களூருவில் உள்ள மலையாளி சமாஜம் மற்றும் போலீசாரின் உதவியுடன் உறவினர்கள் அவரைத் தேட ஆரம்பித்தனர்..

பெங்களூரு லாட்ஜில் கணவன்

அந்த நேரத்தில் பெங்களூருவில் உள்ள லாட்ஜில் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் பரவியது.. இந்த தகவலை கேட்ட சொந்தக்காரர்கள், ஒருவேளை அது சானுகுட்டனாக இருக்குமோ? என்று சந்தேகப்பட்டு லாட்ஜூக்கு ஓடினார்கள்.. அங்கு சென்று பார்த்தபோதுதான், உயிரிழந்தது சானுகுட்டன் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஹரிஷ்மாவின் உடல் மாவேலிக்கரையில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டது.. இதற்கு பிறகே கணவர் சானுகுட்டனின் மரண செய்தி வெளியானது.. இது இருவரின் குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து, கணவரும் தற்கொலை செய்துகொண்டது, பெரும் குழப்பத்தையும் உண்டுபண்ணி வருகிறது.

குழப்பத்தில் போலீசார்

இந்தத் தம்பதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை. தம்பதிக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றெல்லாம் தெரியவில்லை. பெங்களூரு மற்றும் கேரளக் காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடிவு செய்து, பெங்களூர் வரை வந்தவருக்கு என்ன ஆயிற்று என்பதுதான் புரியாத புதிராக உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+