விஜய் ஆட்சியை கவிழ்க்க மெகா ரூட்! கண் காட்டிய ஸ்டாலின்.. திமுகவின் ரகசிய ஆபரேஷன்! எல்லாம் ரெடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசியலை இடைத்தேர்தல் ஜுரம் பிடித்துக்கொண்டு உள்ளது. விரைவில் 7+ தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடைத்தேர்தலை வைத்து பெரிய கேம் ஒன்றை ஆட திமுக தரப்பு திட்டமிட்டு உள்ளதாம்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராத வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இருப்பினும், தவெக 107 இடங்களை மட்டுமே பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு சிறுபான்மை அரசாகவே தற்போதைக்கு ஆட்சியை நடத்தி வருகிறது.

DMK

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி, தவெக அரசை வீழ்த்த திமுக ஒரு ரகசிய மாஸ்டர் பிளானை தீட்டி வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பான்மை வராது

தற்போது தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அந்த இடம் காலியானது. இது தவிர, அதிமுகவின் உட்கட்சிப் பூசலால், அக்கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனர்.

இதனால் மொத்தம் 7 தொகுதிகள் காலியாகியுள்ளன. மேலும் பல அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வரும் நாட்களில் தவெகவில் இணையக்கூடும் என்றும், இதனால் மேலும் சில தொகுதிகள் காலியாக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. எப்படியும் 10+ இடங்களில் இடைத்தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல்களைப் பயன்படுத்தி எப்படியாவது 118 என்ற மேஜிக் நம்பரைத் தொட்டு, கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி தனிப்பெரும்பான்மை பெற்றுவிட வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் திட்டமாக உள்ளது.

திமுகவின் ஆபரேஷன் பை எலக்சன்

ஆனால், தவெகவின் இந்த கணக்குகளுக்கு முட்டுக்கட்டை போட திமுக வியூகத்தை வகுத்துள்ளது. தவெக அரசு முழுமையாக ஆட்சி செய்ய கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக உள்ளது.

இதற்காக காலியாக உள்ள 7 தொகுதிகளிலும், இனி வரவிருக்கும் பிற இடைத்தேர்தல்களிலும் திமுக தனது முழு பலத்தையும் இறக்கி அனைத்து இடங்களையும் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குள் இருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, திமுகவின் பலத்தை சட்டசபைக்குள் அதிகரிப்பது.

இடைத்தேர்தலில் அனைத்திலும் வென்றாலும் கூட திமுக ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் தவெக ஆட்சி கவிழும்.

இடைத்தேர்தல் வெற்றிகள் மூலம் தவெகவை தனிப் பெரும்பான்மை பெறவிடாமல் தடுத்து, சட்டசபையில் தவெக அரசின் பலத்தைக் குறைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஆட்சியைக் கவிழ்ப்பது.

அதன் பின் தற்காலிக அரசு அமைக்க முயலாமல், நேரடியாக ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பொதுத்தேர்தலை கொண்டு வருவது தான் திமுகவின் இறுதி இலக்கு.

திமுக மாஸ்டர் பிளான்

திமுகவின் இந்த அதிரடி நடவடிக்கை தவெக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் பட்சத்தில், அது வெறும் தொகுதிக்கான தேர்தலாக இருக்காது, மாறாக, விஜய்யின் ஆட்சி நீடிக்குமா அல்லது கவிழுமா என்பதை தீர்மானிக்கும் வாழ்வா சாவா போராட்டமாக இருக்கும்.

திமுகவின் இந்த மெகா ஆபரேஷனை முறியடிக்க விஜய்யும் தனது ஆலோசகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+