தாராபுரம் கவுண்டச்சிபுதூரில் வாக்குப் பதிவு நிறுத்தம்! தவெக ஏஜென்ட்டுக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

தாராபுரம்: வேறு பகுதியைச் சேர்ந்தவரை முகவராக கொண்டு வரக் கூடாது என திமுக, அதிமுக முகவர்கள் போராட்டம் நடத்தியதால் தாராபுரம் கவுண்டச்சிபுதூர் வாக்குச் சாவடியில் அரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் கவுண்டச்சிபுதூர் வாக்குச் சாவடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேறு பகுதியைச் சேர்ந்த நபரை வேட்பாளர் முகவராக நியமித்திருந்தனர்.

Dharapuram

ஆனால் அவருக்கு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் ஓட்டு இல்லை எனவும் அவரை இங்கு வேட்பாளர் முகவராக அறிவிக்க கூடாது எனவும் திமுக , அதிமுக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வாக்குப்பதிவு தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது எந்த பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் வேட்பாளர் முகவராக அறிவிக்கப்படலாம் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாற்றுக் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் மீண்டும் வாக்கு பதிவு துவங்கியது. இதன் காரணமாக அரை மணி நேரம் கவுண்டச்சிபுதூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தடைப்பட்டது. இது போல் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

கொழிஞ்சிவாடி வாக்குச் சாவடியில் மூதாட்டி திமுகவுக்கு ஓட்டு போட விரும்பினாராம். ஆனால் அங்கிருந்த ஊழியர் அந்த மூதாட்டியை தவெகவுக்கு வாக்களிக்க வைத்துவிட்டாராம். இதனால் திமுக, அதிமுக முகவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட்டார். அது போல் தம்புரெட்டிப்பாளையம் பகுதியில் வெளியூர் ஆட்சிகளின் நடமாட்டம் இருப்பதாக திமுக, அதிமுக கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளின் எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் அதிமுக சார்பில் வென்றனர்.

இந்த நிலையில் தேர்தல் நடந்த 3 மாதங்களுக்குள் அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தாராபுரத்தில் திமுக சார்பில் சுகன்யா, தவெக சார்பில் சத்தியபாமா, அதிமுக சார்பில் பானுமதி, நாதக சார்பில் கார்த்திகா, கம்யூனிஸ்ட் சார்பில் லட்சுமணன், சுயேச்சைகள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தாராபுரத்தில் 320 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு மொத்தம் 2.23 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,07,285, பெண் வாக்காளர்கள் 1,16,013 ஆவர்.

இந்த தொகுதியில் காலை முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டு சென்றார். அப்போது தவெக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+