ரூ.589.50 மட்டும் செலுத்தினால் ரூ.38,828 கிடைக்கும்.. பயிர் காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு

Subscribe to Oneindia Tamil

தேனி: நெற்பயிர்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.38,828-ல் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த வகையில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.589.50 மட்டும் செலுத்தினால் போதுமானது என்று தேனி மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகள் தாங்கள் பயிரும் பயிர்களுக்கு காப்பீடு செய்வது மிகவும் முக்கியம். காப்பீடு செய்யாமல் போனால், வறட்சி, பேரிடர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் நிவாரணம் பெற முடியாது. எனவே காப்பீடு மிக அவசியம். சில 100 ரூபாய் காப்பீட்டிற்கு செலவு செய்தால், பல ஆயிரம் நிவாரணம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். சரியான முறையில் அதிகாரிகளை அணுகி காப்பீடு பெறுவதற்கு இன்று ஏராளமான வழிகள் உள்ளது. எனவே காப்பீடு செய்வது நல்லது.

farmers

தேனி கலெக்டர் ஆர்.வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் 2026-27-ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் சம்பா சிறப்பு பருவம் நெல் பயிருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் நெல் சம்பா சிறப்பு பருவ பயிருக்கு ஆண்டிப்பட்டி, கண்டமனூர், இராஜதானி, தேவாரம்சம்பட்டி, தென்கரை, தேனி, கொடுவிலார்பட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, போடி, கோடாங்கிப்பட்டி, ராசிங்காபுரம் ஆகிய 14 குறு வட்டங்கள் (பிர்க்காக்கள்) அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.

சம்பா சிறப்பு பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ரூ.38,828-ல் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும். அந்த வகையில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.589.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.

எனவே சம்பா நெல் சிறப்பு பருவம் சாகுபடி கொண்டுள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன்பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ, http://www.pmfby.gov.in என்ற தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விருப்பத்தின்பேரில் காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு சாகுபடிக்கான அடங்கல், இ-அடங்கல் சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், பணம் செலுத்தும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமம் மற்றும் புல எண் போன்ற விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+