ஸ்ரீவைகுண்டம் முதல் கள்ளக்குறிச்சி வரை.. பாலியல் வழக்குகளில் சிக்கிய தவெக நிர்வாகிகள்.. லிஸ்ட் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். பெண் கலெக்டர், மகளிரணி நிர்வாகிகள் என தவெக நிர்வாகிகளிடம் யாரும் தப்பவில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிராக அவர்களின் நிர்வாகிகள் செய்த அட்ராசிட்டி இதோ.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீது புகார்

தவெக ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம். ஜூன் மாதம் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன், வேலை வாங்கி தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, இளம் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதில் தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டாலும் சரவணன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அவர் அடுத்தடுத்து பண மோசடி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

from-srivaikuntam-to-kallakurichi-here-is-the-list-of-harassment-complaint-against-tvk-cadres

ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்

ஜூலை மாதமும் அதிர்ச்சி தொடர்ந்தது. ராணிப்பேட்டை தவெக மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மீது திருமணமான பெண் பாலியல் புகார் அளித்தார். கட்சி பதவிக்காகவும், வழக்கில் இருந்து விடுவிப்பதாகவும் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் கூறினார். விஜய் மோகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை.

ராணிப்பேட்டை ஒன்றிய செயலாளர்

மாவட்ட செயலாளர் தான் தப்பு செய்வாங்களா.. நாங்களும் செய்வோம் என ராணிப்பேட்டை தவெக ஒன்றிய செயலாளர் களத்தில் குதித்தார். தவெக ஒன்றிய செயலாளர் சசிக்குமார், கட்சியில் பதவி வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் அவரிடம் பணம் பறித்து, மிரட்டல் விடுப்பதாகவும் புகாரில் கூறியிருந்தார். நடவடிக்கை இல்லை.

கலெக்டரை அச்சுறுத்திய கள்ளக்குறிச்சி எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், அதே மாவட்டத்தின் பெண் கலெக்டர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது. கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தன. ஐஏஎஸ் அதிகாரிகள் போர்கொடி தூக்கியும் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை இல்லை. முதலமைச்சர் விஜய் அவருக்கு தீபாவளி பரிசு கொடுத்து எச்சரித்து அனுப்ப மட்டுமே செய்தார்.

காரமடை ஒன்றிய செயலாளர்

கோவை மாவட்டம், காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது, அதே கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் அளித்தார். கூட்டங்களில் கருப்பசாமி சாதிய வன்கொடுமையில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து காரமடை காவல்துறையினர் கருப்பசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலியல், சாதிய கொடுமை, பணம் பறிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்

போட்டியே தவெக நிர்வாகிகளிடையே தான். பெண்களை யார் அதிகம் துன்புறுத்துவது என எம்எல்ஏ, மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது. திருவண்ணாமலை தவெக மாவட்ட வடக்கு செயலாளராக இருப்பவர் சத்யா. இவர் மகளிரணி பெண்களுக்கு அசிங்கமாக மெசேஜ் அனுப்பி அட்ஜெஸ்மென்ட் செய்ய சொல்வதாக மகளிரணியினரே புகார் எழுப்பினர். அவரை கண்டித்து போராட்டமும் நடந்துள்ளது.

இதேபோல தமிழகம் முழுவதும் ஏராளமான தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார், பண மோசடி உள்ளிட்ட புகார்கள் எழுந்து வருகிறது. தவெக நிர்வாகிகளை கட்டுப்படுத்துவாரா விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+