சிங்கப்பூருக்கு இணையான ஸ்போர்ட்ஸ் சிட்டி.. இனி தமிழக வீரர்களுக்கு விமான பயணம்.. ஆதவ் அர்ஜுனா
சென்னை: விளையாட்டுத்துறையில் மாணவர்களிடம் திறமைகள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கிறார்கள். திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் வசம் விளையாட்டுத்துறை இருந்தது. தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களை கொண்டு வரப்பட்டது. தவெக ஆட்சியில் விளையாட்டுத்துறை ஆதவ் அர்ஜுனா வசம் உள்ளது. சிங்கப்பூர், ஆஸ்திரோலியா நாடுகளுக்கு இணையான ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க திட்டமிட்டுள்ளதாக ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
சென்னையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "120 ஏக்கரில் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க திட்டமிட்டுள்ளோம். பாராஒலிம்புக்கு 20 ஏக்கரில் பயிற்சி மையம் அமைக்கவுள்ளோம். முக்கியமான 10 கிராமப் பகுதிகளி்ல் விளையாட்டு பயிற்சி மையங்கள் உள்ளன. ஒலிம்பிக் சிட்டி, பாரா ஒலிம்பிக்குக்கு, சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஆஸ்திரோலியா நாட்டிடம் ஆலோசனை பெற்றுள்ளோம்.

இனி எல்லா வீரர்களும் விமான பயணம்
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த போவது ஆஸ்திரேலியா. அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்கள். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் எப்படி செய்கிறார்களோ, அந்த மாதிரியான கட்டுமானங்களை ஏற்படுத்த நினைக்கிறோம். அதற்கான பணிகள் நடக்கின்றன. அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்கள் கட்டவும், 11 மாவட்டங்களில் அதை புனரமைத்து குளிர்சாதன வசதி ஏற்படுத்தும் பணியை செய்யவுள்ளோம்.
13, 16, 18 வயதிற்குட்பட்டோர் பிரிவுக்கு 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. தமிழ்நாடு ஜெர்சியுடன் பேருந்து, ரயில்களில் சீட் கிடைக்காமல் பயணிப்பார்கள். தமிழ்நாட்டிற்காக விளையாடுவோர் அனைவரையும் விமானத்தில் அனுப்பும் கனவு திட்டத்திற்கு, முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கான செலவை அரசே ஏற்கும். 8 வயதில் இருந்தே ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் இணையலாம். இப்போது 2,500 பேர் தான் ஹாஸ்டலில் உள்ளனர். 3, 4 ஆண்டுகளில் 30,000 பேர் ஹாஸ்டலில் தங்கும் நிலை ஏற்படும்.
காலி இடத்தில் மைதானம்
கிராமப் பகுதியில் வறுமையில் இருந்தாலும், திறமை இருந்தால் அரசு ஊக்கமளிக்கும். ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் இருந்தால் மட்டுமே அவர்களால் முழு கவனத்துடன் பயிற்சி செய்ய முடியும். குறைந்தபட்சம் 10 கிரவுண்ட் இருக்கும் 4 காலியிடங்களை தலா ஒரு கோடியில் மேம்படுத்தவுள்ளோம். இரவு 11 மணி வரை அந்த மைதானத்தில் விளையாடலாம். அதில் அனைத்து விதமான வசதிகளும் இருக்கும். சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 8 விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


Click it and Unblock the Notifications
