"ஃப்ரேம பாருங்க ஜி”.. பிரதமர் மோடியையே தூக்கிச் சாப்பிட்ட டிகே சிவகுமார்.. காங்கிரஸார் செம ஹேப்பி!
பெங்களூர்: "ஃப்ரேம பாருங்க ஜி" என ஒரு ஃபோட்டோவை கொண்டாடி வருகின்றனர் கர்நாடக காங்கிரஸ் கட்சியினர். புகைப்படங்களில் பிரதமர் மோடி தான் எப்போதும் கவனம் ஈர்ப்பவராக இருப்பார். கர்நாடகாவில் இன்று நடைபெற்ற நிகழ்வில் எடுக்கப்பட்ட போட்டோவில், 'கெத்து' காட்டியிருக்கிறார் கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார்.
பிரதமர் நரேந்திர மோடியும், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் ஒரே ஃபிரேமில் இடம்பெற்றுள்ள புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடைபெற்ற மெட்ரோ ரயில் பிங்க் லைன் துவக்க விழாவின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

"பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறாரா?" என்கிற அளவுக்கு கிண்டலான கேப்ஷன்களுடன் இந்தப் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. வழக்கமாக, பல அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடியின் முன்பு சற்று பணிவாகவும், அடக்கமாகவும் தான் நிற்பார்கள். ஆனால், டி.கே.சிவகுமார் பிரதமர் மோடிக்கு முன்பே மிகவும் கம்பீரமாக, கெத்தாக மாஸ் லுக்கில் நிற்பதாகக் கூறி காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சிலாகித்துப் பேசி வருகின்றனர்.
அரசியல் மேடைகளில் தலைவர்கள் அருகருகே இருக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்க சமூக வலைதளங்களில் அவ்வப்போது ட்ரெண்ட் ஆவது வழக்கம் தான். அந்த வகையில், இன்று நடந்த இந்த நிகழ்வின் இந்தப் புகைப்படம் காங்கிரஸ் கட்சியினரை கொண்டாட வைத்துள்ளது. மோடிக்கு அருகே மாஸ் ஆன மேனரிசத்தோடு போஸ் கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார் டிகே சிவகுமார். மற்றபடி, இது தற்செயலாகப் பதிவான ஒரு ஃபோட்டோ தானே தவிர, வேறு எந்த ட்விஸ்ட்டும் இல்லை என்பதே நிதர்சனம்.
இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், "பிரதமர் அவர்களே, நீங்கள் இப்போதுதான் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணையைக் கண்டீர்கள். மேகதாது திட்டத்தை கர்நாடகாவில் செயல்படுத்த வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் நமக்குத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. சட்டரீதியாக நீங்கள் எங்களுக்கு அனுமதி வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். இந்த ஆற்றுப் படுகையில் பாயும் காவிரி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, பெங்களூரு மற்றும் பிற பகுதிகளுக்கு உதவுகிறது. எனவே, நீங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது குடிநீருக்கான ஒரு சமநிலை நீர்த்தேக்கம். இது தமிழ்நாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications
