3 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அயல்பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், எல்காட் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்தது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டவுன் பஞ்சாயத்து இயக்குநராக இருந்த பிரியங்கா ஐஏஎஸ் தமிழ்நாடு அரசின் மின் ஆளுகை (இ-சேவை) இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த கே.பி.கார்த்திகேயன் ஐஏஎஸ்-ஐ, பேரூராட்சிகள் துறை இயக்குநராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அயல் பணியிலிருந்து திரும்பிய பி.விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
