விஜய் பெயரை சொன்னதும் கேட்ட சத்தம்.. கடுப்பான அமீர்.. அடுத்த நொடியே பார்த்திபன் வைத்த அரசியல் பஞ்ச்
சென்னை: பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி பேசுவார்கள் அல்லது ஹீரோவை பற்றி பேசுவார்கள். இல்லை என்றால் அந்த படம் உருவான விஷயத்தை பற்றி பேசுவார்கள். ஆனால் விஜய் சேதுபதி மிஸ்கினின் டிரெயின் பட விழாவில் விசில் சத்தமே தனிக்கதையாக மாறிவிட்டது. இயக்குனர் அமீர் பேசும் போது ரசிகர்களிடம் கடுப்பாக, அடுத்ததாக வந்த பார்த்திபன் அதே விசில் சத்தத்தை வைத்து முதல்வர் விஜய் வரை கனெக்ட் செய்தது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ட்ரெயின் திரைப்படம்
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த டீசரில் ஓடும் ரயிலுக்குள் ஆயுதம் வைத்திருப்பவர்களுடன் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. இதனால் ட்ரெயினுக்குள் இருக்கும் பிணைய கைதிகளை மீட்கும் படமாக கதை நகரலாம் என்ற எதிர்பார்ப்பை டீசர் ஏற்படுத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசியது கவனம் பெற்று இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் அரசியல் மற்றும் அவருடைய செயல்பாடுகள் குறித்து பல இடங்களில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதனால் அவர் ட்ரெயின் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பெயரை சொன்னதும் அரங்கில் ரசிகர்கள் எதிர்பார்க்காத செயலையும் செய்திருக்கின்றனர்.

இயக்குநர் அமீர் பேச்சு
அதாவது அமீர் பேசும் போதும் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை நான் பார்த்து வியந்து இருக்கிறேன். அந்த படத்தில் விஜய்யின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அவரை தாண்டி இன்னொரு நடிகரையும் பார்த்து நான் பிரமித்தேன். அவர் வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதி தான். மாஸ்டர் படத்தில் பவானி கேரக்டரை விஜய் சேதுபதி அவ்வளவு அழகாக காட்டி இருப்பார்.
அதேபோல லியோ படத்தில் விஜய்க்கு இணையாக தன்னுடைய கவனத்தை ஈர்த்தது மிஷ்கன் என்றும் பாராட்டிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் விஜய் பெயரை கேட்டதும் அங்கிருந்த ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் கடுப்பான அமீர், ஏன்டா இப்படி பண்ணுறீங்க? இருக்க விருப்பம் இல்லன்னா அப்பவே போயிருக்க வேண்டியதுதானே என்று கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் பார்த்திபன் பேச்சு
அதேபோல இதே நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் பேசியதும் வைரல் ஆகி வருகிறது. அவர் பேசும்போது, இந்த நிகழ்ச்சி தொடங்கி மூன்று மணி நேரம் ஆகிவிட்டது. ஆனால் ரசிகர்கள் கொடுக்கும் விசில் சத்தம் தான் நிகழ்ச்சியை இவ்வளவு எனர்ஜியாக வைத்திருக்கிறது. இதே விசில் சத்தம் தான் நாட்டையும் ஆண்டு கொண்டிருக்கிறது. இப்போது இந்த நிகழ்ச்சிக்கும் சுவாரசியத்தை கொடுத்திருக்கிறது என்று பேசினார்.
பிறகு நடிகர் எம் ஆர் ராதா உடன் மிஷ்கினை ஒப்பிட்டு பேசினார். எம் ஆர் ராதா நடிப்பை பற்றி சொல்லத் தேவையே இல்லை ஆனால் அவர் மனதில் பட்டதை யார் என்னவென்று பார்க்காமல் பேசி விடுவார். அதேபோல ஒருவர் தான் மிஸ்கின். இனி மிஸ்கின் அடுத்த டி ராஜேந்தராக வருவார் என்று பாராட்ட, அதைக் கேட்டு மிஸ்கினும் சந்தோஷப்பட்டார்.
அந்த சமயத்தில் ரசிகர்கள் விசில் சத்தம் கொடுத்து கொண்டே இருக்க, அப்போது பார்த்திபன் விசில் சத்தம் பேசி முடித்த பிறகு வந்தால் பாராட்டாக இருக்கும். ஆனால் இப்படி இடையிடையே வந்து கொண்டே இருந்தால் பேசுவதற்கு தடையாக இருக்கிறது என்று வேண்டுகோள் வைத்துக்கொண்டார். ட்ரெயின் பட இசை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய் பற்றி பேசிய இந்த வீடியோ தான் இப்போ இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
