தமிழகத்தில் பசுக்கள், கன்றுகளை வெட்ட ஹைகோர்ட் விதித்த தடை நீக்கம்! உச்சநீதிமன்றத்தில் தவெக வெற்றி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் பசுக்கள், கன்றுகளை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கயது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த தடையை நீக்கியது.

பக்ரீத் பண்டிகையையொட்டி கோவையில் பொது இடங்களில் பசுக்கள், கன்றுகள் வெட்டப்படுவதை தடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவரும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சூரிய பிரசாந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

supreme court cow

அந்த மனுவில், "அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தாண்டி பொது இடங்களில் மாடுகலை வெட்டக் கூடாது என்றும் மாடுகளை வெட்டும் முன்பாக அவை முழுமையாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்றும் கன்றுக்குட்டிகள் வெட்டப்படுகின்றனவா என்றும் சோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மே 27 ஆம் தேதி விசாரித்தது. ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2020 ஆம் ஆண்டு பொது இடங்களில் மாடுகளை வெட்டக் கூடாது என தடை விதித்திருந்தது.

1976 ஆம் ஆண்டு தமிழக அரசும் பசுக்கள் வெட்டப்படுவதற்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் எந்தவொரு விலங்களையும் வெட்டக் கூடாது.

அவ்வாறு பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

பக்ரீத் பண்டிகையின் போது ஹைகோர்ட் தடை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்ரும் சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது அவர், கடந்த 10 ஆண்டுகளாக உழுதல், சுமை தூக்குதல் உள்ளிட்ட வேலை செய்யாத பசுக்கள், இனப்பெருக்கம் செய்யாத பசுக்களை வதம் செய்ய அனுமதி அளித்த விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது உயர்நீதிமன்றம் விதித்த தடை! என வாதிட்டார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+