Viruchigam: விருச்சிக ராசிக்கு திருமண யோகம்... வெளியூரில் இருந்து பணம் வரும் சூப்பர் வாரம்!
Weekly Rasi Palan: ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், விருச்சிகம், மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 23 முதல் 28 ஆம் தேதி (ஆனி 9 முதல் 14 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மீது இருக்கும் பொறாமையால் நிறைய குடைச்சல் கொடுப்பார்கள். உங்களிடம் இருக்கும் புத்திசாலித்தனத்தை மட்டப்டுத்த பார்ப்பார்கள். அதைப் பற்றி வருந்தாமல் அலட்சியப்படுத்துவது நன்மை பயக்கும்.
கவனம்
செல்லும்போது உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பேக்கரி பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. சூடான உணவுப் பொருள்களை சாப்பிடுவது நன்மை. ஏதோ ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்து. ஆவணங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பெரியளவில் ஏற்றங்கள் காணப்படும்.
திருமண யோகம்
ரகசியங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் திருமண யோகம் உண்டாகும். பணவரவு அற்புதமாக இருக்கும். வெளியூர் செல்லும் யோகம் உண்டு. வெளியூரில் இருந்து பணம், வெளிநாட்டில் இருந்த பணம் வந்து சேரும்.
ஆரோக்கியம்
புதிய நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள். நிறைய கோவில்களக்குச் சென்று வருவீர்கள். புதிய புதிய ஆர்டர்கள் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான பாதிப்புகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. அசிடிட்டி, கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
வெளியில் செல்லும்போது உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. பெருமாள், தாயார் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வெங்கடேசப் பெருமாள் சுப்பிரபாதத்தை கேட்பது நல்லது. ஆரோக்கியத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ரத்த அழுத்தத்தில் பாதிப்பு வரும் என்பதால் கவனம் தேவை. சந்தோஷம் 75 சதவீதம், பொருளாதாரம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications