நண்பருக்கு ரூ.1,100க்குள் வர வேண்டிய மின் கட்டணம் வெறும் 15 யூனிட்டால் ரூ.2,166 மாறியது எப்படி?
சென்னை: "நண்பா.. போன மாசம் வரைக்கும் ஆயிரத்துக்குள்ள தான் பில் வந்துச்சு. இந்த மாசம் என்னடான்னா ரெண்டாயிரத்தைத் தாண்டிடுச்சு. அப்படி என்ன நாங்க ஏசி-யை அதிகமாக பயன்படுத்திவிட்டோமா என்று தெரியல..." என்று தலையில் கை வைத்தபடி என்னிடம் புலம்பினார் சென்னை புறநகரைச் சேர்ந்த நண்பர் ஒருவர். அவரது வீட்டிற்கு சென்ற போது, கூறினார். அவரது மின்சார பில்லை வாங்கிப் பார்த்த எனக்கு தூக்கிவாரிப்போட்டது. வந்திருந்த மொத்த யூனிட்கள் 515. கட்ட வேண்டிய தொகையோ ₹2,166.
சரி, இதில் என்ன அதிர்ச்சி என்கிறீர்களா? அங்குதான் இருக்கிறது மின்சார வாரியத்தின் அந்த 'ஸ்லாப்' ட்விக்ஸ் ! ஒருவேளை இந்த நுகர்வோருக்கு வெறும் 15 யூனிட்டுகள் குறைவாக வந்து, மொத்த யூனிட் 499 என்று காட்டியிருந்தால், அவர் கட்ட வேண்டிய பில் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ₹1,100-க்குள் தான். ஆனால் வாட்ஸ் அப் மெசேஜில் வரும் மின் கட்டண லிங்க்கைப் பார்த்துவிட்டு, "என்னப்பா இது, 15 யூனிட் கூடினா பில் டபுள் ஆகுது?" என்று கொதித்தபடி பேசினார். அவருக்கு என்ன நடந்தது என்பதை புரிய வைத்தேன். அதனை இப்போது பார்ப்போம். பின்னணியில் இருக்கும் விஷயத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் புதிய மின்சாரக் கொள்கைகளின்படி, 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற சலுகை நடுத்தர மக்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது உண்மைதான். ஆனால், இந்தச் சலுகை யாருக்குத் தெரியுமா? உங்கள் வீட்டின் மின் பயன்பாடு 500 யூனிட்டிற்குள் இருக்கும் வரை மட்டுமே கிடைக்கும். இல்லாவிட்டால் 500 யூனிட்டிற்கு மேல் போகும் போது, உங்களுக்கு மானியம் போவதுடன், பில்லும் உங்கள் தலையில் தான் விழும்.
நீங்கள் 500 யூனிட் என்ற 'லட்சுமண ரேகையை' தாண்டும்போது, மின்சார வாரியத்தின் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உங்களை 'ஆடம்பர நுகர்வோர்' லிஸ்ட்டில் சேர்த்துவிடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம் வட மாவட்டங்கள் எல்லாமே வெயிலுக்கு பேர் போனவை.. அதுவும் சென்னை எல்லாம் கான்ங்ரீட் காடு.. இங்கு மரங்களுக்கு பதில் கட்டிடங்களே இருக்கும்.
ஏசி இல்லாமல் இரவில வாழவே முடியாத அளவிற்கு புழுக்கம் இருக்கும். வழக்கமாக ஜூனில் நல்ல மழை சென்னை புறநகரில் விழுந்துவிடும். ஆனால் இப்போது வரை பெரிய அளவில் மழை இல்லை. வெயிலின் தாக்கம் காரணமாக ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதன் தாக்கம் பல வீடுகளில் எதிரொலித்துள்ளது. அப்படித்தான் நண்பரின் வீட்டிலும் எதிரொலித்து இருந்தது. அவருக்கு என்ன வருத்தம் என்றால், ஒரு 15 யூனிட்டை சிக்கனமாக பயன்படுத்தி இருந்தால் 1100 ரூபாய் மிச்சம் ஆகியிருக்குமே என்று புலம்பினார். அவர் புலம்பியதிலும் நியாயம் உள்ளது..
ஏனெனில் என் நண்பருக்கு 200 யூனிட் இலவச மின்சாரத்தின் முழுப் பலனும் கிடைத்திருக்கும். மீதமுள்ள 299 யூனிட்டுகளுக்கும் மிகக் குறைந்த கட்டண விகிதமே கணக்கிடப்பட்டிருக்கும். பில் தொகை ₹1,100 தாண்ட வாய்ப்பே இல்லை. என் நண்பருக்கு 500-ஐத் தாண்டியதால், அந்த 200 யூனிட் இலவச சலுகையின் வீச்சு அப்படியே சுருங்கி, 101-வது யூனிட்டில் இருந்தே கட்டணம் மளமளவென உயரத் தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் ₹8.50, ₹10.10, மற்றும் ₹11.15 எனப் பாய்ந்து, அவரது பழைய யூனிட்டுகளுக்கும் சேர்த்தே கட்டணத்தை எகிற வைத்துவிடுகிறது.
என் நண்பர் அவர் பயன்படுத்திய கூடுதலாகப் பயன்படுத்திய அந்த 15 யூனிட்டுக்கு மட்டும் தண்டத் தொகை கட்டவில்லை. அந்த 15 யூனிட் எக்ஸ்ட்ரா வந்ததால், மொத்தமாக சலுகைகளை இழந்து ₹1,000-க்கும் மேல் நஷ்டத்தைச் சந்தித்துள்ளார. வீட்டில் மின்சார மீட்டரைத் தினமும் வாட்ச் செய்ய முடியாத நடுத்தர மக்கள், இரண்டு மாத முடிவில் பில்லைப் பார்த்துவிட்டு என் நண்பரை போல் புலம்புகிறார்கள். . "மீட்டரைக் கவனிச்சு 490 யூனிட் வரும்போதே மெயின் சுவிட்சை ஆஃப் பண்ணியிருக்கணும் போல" என்று புலம்பினார். அவரிடம் நான் சில டிரிக்ஸ் பாலோ பண்ணுமாறு கூறினேன்.
அதனை உங்களிடமும் கூறுகிறேன். ஏசி பயன்பாடு வழக்கமாக பயன்படுத்துவதைவிட ஒரு மணி நேரம் குறைவாக பயன்படுத்துமாறு கூறினேன். சரியாக தூங்கும் நேரத்தில் பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் மொட்டை மாடியில் காற்று வாங்குங்கள் என்றேன். அதேபோல் மோட்டார் பயன்பாடு அவரது வீட்டில் அதிகமாகவே இருந்தது. மோட்டாரை போட்டுவிட்டு ஆப் பண்ணாமல் விடாமல் சரியாக ஆஃப் செய்யுமாறு கூறினேன். ஹிட்டர் இந்த கோடையில் தேவை குறைவு.. அதனையும் குறைக்க கூறினேன். இப்படி அவர் செய்திருந்தால் கண்டிப்பாக மின் கட்டணம் குறைந்து இருக்கும். அவரும் அடுத்த முறை இதனை செய்வதாக கூறினார். நானும் அங்கிருந்து விடைபெற்று வந்தேன்.














Click it and Unblock the Notifications