மதுரையில் 26 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம் பதிவு.. முதல் முறையாக 108.5 பாரன்ஹீட் சுட்டெரித்த வெயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை விமான நிலைய பகுதியில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவாக முதல் முறையாக ஜூலை மாதத்தில் 108.5 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த வெப்பம் பதிவாகியிருந்ததாம். தற்போது 26 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அதே அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இரவில் கடும் உஷ்ணமும் நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என பாரபட்சம் இன்றி அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

Madurai Airport Records Highest July Temperature in 26 Years at 108 5 F

25 ஆண்டுகளில் இல்லாத அளவு

இந்த நிலையில், மதுரை விமான நிலைய பகுதியில் 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இன்று வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இன்று 108.5 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், 26 ஆண்டுகள் கழித்து இன்று மீண்டும் அந்த அளவுக்கு கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது. அனல் காற்றும் வீசியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

9 இடங்களில் வெயில் சதம்

மதுரை விமான நிலைய பகுதி - 108.5
மதுரை நகரம் - 106.9
திருத்தணி - 104.9
வேலூர் - 104.7
திருச்சி - 104.2

பாளையங்கோட்டை - 104.2
தூத்துக்குடி - 104,
புதுவை - 103.6
ஈரோடு - 10.3
கடலூர் - 103.1

அசௌகரியம் ஏற்படலாம்

முன்னதாக இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், வெப்ப நிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கூறியிருந்தது. வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "14-07-2026 முதல் 16-07-2026 வரை: உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

நாளை மறுநாள் வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்" என்று தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+