விஜய்க்கு ஜோடியாக நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு முதலில் யார் ஞாபகத்துக்கு வருகிறார்? ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்த அந்த ஹீரோயின் இப்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்தால், 'அட, இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதா?' என்று நமக்கே தோன்றும். அவர் வேறு யாருமில்லை... ரக்ஷிதா பிரேம்.

தமிழில் சிம்புவுடன் 'Dum' படத்தில் நடித்த ரக்ஷிதா, அதன்பிறகு விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்தார். குறிப்பாக மதுர படத்தில் விஜய் - ரக்ஷிதா ஜோடி அப்போது ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றது. அதிலும் அந்தப் படத்தில் வந்த எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான் பாட்டை 90ஸ் கிட்ஸ்கள் மறந்து இருக்க மாட்டார்கள். இப்போது ரக்ஷிதா பிரேம் மீண்டும் இணையத்தில் பேசப்படுவதற்கு காரணம், அவர் பகிர்ந்திருக்கும் சில குடும்ப புகைப்படங்கள்தான்.

மகன் சூர்யாவுடன் ரக்ஷிதா

ரக்ஷிதா தனது கணவரும் இயக்குநருமான ஜோகி பிரேம் மற்றும் மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்களில் அதிகமாக கவனத்தை ஈர்த்திருப்பது சூர்யாதான். அப்பா, அம்மாவுக்கு நடுவில் நிற்கும் அவர், இருவரையும்விட உயரமாக வளர்ந்துவிட்டது போல இருக்கிறார்.

Actress Vijay Rakshita

அதனால் ரக்ஷிதாவின் ரசிகர்கள் புகைப்படங்களைப் பார்த்ததும் சூர்யாவைப் பற்றிதான் அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 'அடுத்த ஹீரோ ரெடியாகிவிட்டாரே' என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சூர்யா சினிமாவுக்கு முற்றிலும் புதிதானவர் கிடையாது. ஜோகி பிரேம் இயக்கத்தில் உருவான 'KD: The Devil' படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து ஏற்கெனவே திரையில் அறிமுகமாகிவிட்டார்.

Actress Vijay Rakshita

மதுர பட ஹீரோயினி

அதனால் இப்போது அம்மா ரக்ஷிதாவுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்களுக்கு, "இவரை ஹீரோவாக பார்க்க இன்னும் எவ்வளவு நாள்?" என்ற ஆர்வமும் வந்திருக்கிறது. ரக்ஷிதாவின் சினிமா பயணத்தைப் பார்த்தால், அவர் அறிமுகமான காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2002-ல் கன்னடத்தில் அப்பு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டில் தெலுங்கிலும் இடியட் படத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் சிம்புவுடன் 'Dum' படத்தில் நடித்தார். அதன்பிறகுதான் விஜய்யுடன் 'மதுர'. விஜய் அப்போது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்திருந்தார். அதனால் தமிழ் ரசிகர்களுக்கும் அவர் முகம் நன்றாக பரிச்சயமானது. தமிழில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் ரக்ஷிதா பல படங்களில் நடித்திருக்கிறார். தர்ஷன், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

Actress Vijay Rakshita

திருமணத்துக்கு பிறகு மாறிய பாதை

இயக்குநர் ஜோகி பிரேம் மீது காதல் ஏற்பட்டு, இருவரும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிய ரக்ஷிதா, தயாரிப்பு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது கணவர் பிரேம் இயக்கிய 'Jogayya', 'DK', 'Ek Love Ya' உள்ளிட்ட படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். அதாவது, ஒருகாலத்தில் கேமரா முன்பு ஹீரோயினாக வலம் வந்தவர், பின்னர் கேமராவுக்கு பின்னால் தயாரிப்பாளராக மாறிவிட்டார்.

அதனால் தான் பழைய ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும், "மதுர ஹீரோயினியா இது... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே!" என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+