ஹைதராபாத் ஓட்டலில் போலி பெயரில் ரூம் போட்ட ஜோடி.. விடிகாலை 3 மணிக்கு எங்கே போனார் அந்த ஆண் நண்பர்?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் ஓட்டலுக்கு ஆண் நண்பருடன் சென்றுள்ளார் மருத்துவ மாணவி ஸ்ரீஜா.. திடீரென தங்க செயின் சம்பந்தமான விவாதம் இருவருக்குள்ளும் வெடித்துள்ளது.. அதற்கு பிறகு நடந்த சம்பவம்தான் தெலங்கானாவை அதிர வைத்துள்ளது.. சம்பந்தப்பட்ட நபரையும் போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோமதி ஸ்ருஜனா. 27 வயதான இவர், ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் முதுநிலை மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். எம்பிபிஎஸ் படித்த காலத்திலிருந்தே ரவிக்குமார் என்பவருடன் கோமதிக்கு பழக்கம் இருந்துள்ளது.

Hyderabad Hotel

ஹைதராபாத் மருத்துவ மாணவி

அதாவது 7 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 2 பேருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி உள்ளது.. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமாருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டிருக்கிறது. அப்போது கோமதியிடமிருந்து அவசரத்துக்கு அடமானம் வைக்க, ஒரு தங்கச்சங்கிலியை வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், நாட்கள் கடந்தும் சங்கிலியை மீட்டு ரவிக்குமார் தரவில்லை.. அதனால் அதை திருப்பித் தருமாறு கோமதி கேட்டிருக்கிறார்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ரவிக்குமார், கோமதிக்கு போனை போட்டுள்ளார்.. அடமானம் வைத்த சங்கிலியை மீட்டு விட்டதாகவும், அதை வந்து வாங்கி கொள்ள ஹைதராபாத்துக்கு வருமாறும் சொல்லியிருக்கிறார்... உடனே கோமதியும், கடந்த 30-ம் தேதி ஹைதராபாத்துக்கு கிளம்பி சென்றுள்ளார்.

ஹோட்டலில் ரவிக்குமார்

மியாபூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் ரவிக்குமார் தங்கியிருப்பதாக சொல்லவும், அந்த ஓட்டலுக்கு சென்றிருக்கிறார்.. 2 பேரும் அங்கே தங்கியிருக்கிறார்கள். ஆனால், கோமதியிடம் ரவிக்குமார் சங்கிலியை திருப்பி தரவில்லை.. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, கோமதியிடமிருந்து போன் இல்லாதது குடும்பத்தினருக்கு குழப்பத்தை தந்தது.. அவரை போனில் தொடர்புகொள்ளவும் முடியவில்லை... இதனால் குடும்பத்தினர் பதறிப்போயுள்ளனர். உடனே அவரை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.. இதையடுத்து கோமதியின் செல்போன் மெசேஜ்களை வைத்து தேடியபோது, அவர் மியாபூர் பகுதியில் உள்ள அந்த ஹோட்டலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது.

உடலில் காயங்கள் இல்லை

உடனே அந்த அறைக்குள் சென்றபோது, கோமதி சடலமாக கிடந்துள்ளார். அவரது உடம்பில் பெரிய காயங்கள் எதுவும் வெளியில் தெரியவில்லை.. ஆனால், அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததாம்..

இதையடுத்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், ரவிக்குமார் அதிகாலை 3 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது..

அன்றைய இரவு 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஸ்ரீஜனாவை ஸ்ரீனிவாஸ் கொலை செய்துவிட்டு, அதன்பிறகு விடிகாலை 3 மணிக்கு தப்பி சென்றிருக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ரமனா ரெட்டி தெரிவித்துள்ளார்... ரவிக்குமார் தற்போது தலைமறைவாக இருக்கிறார். எங்கே போனார் என்பது தெரியவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.

ரவிக்குமார் எங்கே

தனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கோமதியின் அப்பா கே. பூமய்யா, போலீஸில் புகார் தந்ததன் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்து, ரவிக்குமாரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.. ஹோட்டல் சிசிடிவி காட்சிகள், செல்போன் மேசேஜ்கள் போன்றவற்றையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், போஸ்ட்மார்ட்டம் செய்தும் அவர் எப்படி இறந்தார் என்பது உடனடியாக தெரியவில்லை.

ஆனால், ஓட்டலில் ரூம் புக் செய்யும்போது, அந்த பெண், தன்னுடைய பெயரை துர்கா என்றும், அவரது காதலன் தனது பெயரை கணேஷ் என்று ஹோட்டலில் பெயரை மாற்றிக் கொடுத்துள்ளார்களாம்.

ஹோட்டல் அறைக்குள் உண்மையில் என்ன நடந்தது? தங்கச்சங்கிலி தொடர்பான வாக்குவாதம் எந்த அளவுக்கு போனது? கோமதியின் மரணத்துக்கு காரணம் என்ன? பெயரை ஏன் ஓட்டலில் மாற்றி தந்தார்கள்? என்பதற்கான பதில்களுக்காக அடுத்தகட்ட விசாரணையும் மருத்துவ அறிக்கைகளும் காத்திருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+