ஹார்முஸை கைவிடும் அமீரகம்.. கச்சிதமாக ரெடியாகும் புதிய ரூட்.. இனி அடித்து ஆட போகுது!

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸை சுற்றியே கடந்த சில மாதங்களாக அரசியல் இருந்து வருகிறது. போரால் இந்த பாதையில் கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கிய நிலையில், அமீரகம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஹார்முஸை சார்ந்து இருப்பதை குறைக்க அமீரகம் புதிய திட்டத்தை போட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களாக ஹார்முஸை சுற்றிலும் பதற்றம் அதிகரிக்கிறது. அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி தாக்கி வருவதால் ஹார்முஸில் கப்பல்கள் செல்வது நிச்சயமற்றே இருக்கிறது. இதனால் வளைகுடாவில் உள்ள இதர நாடுகள் வர்த்தகம் செய்ய முடியாமல் தவிக்கிறது. பெரும்பாலான வளைகுடா நாடுகள் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நம்பி இருக்கும் சூழலில் இது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

UAE

புதிய துறைமுகம்

இந்தச் சூழலில் தான் ஹார்முஸ் ஜலசந்தியை சார்ந்திருப்பதை குறைக்கும் வகையில் அமீரகம் புதிய ஆழ்கடல் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. முன்பே குறிப்பிட்டது போல ஈரான் மோதல் காரணமாக ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகளே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

துபாயை சேர்ந்த டிபி World என்ற நிறுவனம் இந்த துறைமுகத்தை அமைக்கவுள்ளது. அமீரகத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள புஜைரா பகுதியில் இந்த புதிய ஆழ்கடல் துறைமுகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு ஏற்கனவே செயல்பட்டு உள்ள துறைமுகத்திலும் புதிய சரக்கு முனையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

திட்டம் என்ன

அமீரகத்தில் 2005ல் உருவாக்கப்பட்ட டிபி World சரக்கு போக்குவரத்து, துறைமுக நிர்வாகம் மற்றும் அமீரகத்தில் உள்ள சுதந்திர வர்த்தக மண்டலங்களை நிர்வகிப்பது போன்ற பணிகளை முன்னின்று நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 7 கோடி கண்டெய்னர்களை கையாளும் இந்த நிறுவனம், துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் இருந்தே பெரும்பாலான சரக்குகளை கையாண்டு வந்தது.

கடும் பாதிப்பு

ஆனால், கடந்த சில மாதங்களாக அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் காரணமாக இந்த வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஈரான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைத் தாக்குதலில் ஜெபல் அலி துறைமுகம் பாதிக்கப்பட்டது. துறைமுகத்தில் முக்கிய இடங்களில் தீ விபத்தும் கூட ஏற்பட்டது. மேலும், இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஜெபல் அலி துறைமுகத்தின் வர்த்தக செயல்பாடுகள் 90 சதவீதம் வரை முடங்கியதாகவும் கூறப்படுகிறது.

இன்னுமே கூட ஹார்முஸில் போருக்கு முந்தைய நிலை ஏற்படவில்லை. மேலும், எதிர்காலத்திலும் மீண்டும் இதுபோன்ற மோதல் வெடிக்கலாம் என்பதால் ஹார்முஸை தவிர்த்துவிட்டு மாற்று வழியை உருவாக்க அமீரகம் திட்டமிட்டுள்ளது. அதற்காகவே இந்த புதிய ஆழ்கடல் துறைமுகம் அமைக்கப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ், அரபிக்கடலுடன் இணையும் ஓமன் வளைகுடா பகுதி வழியாகச் சரக்குகள் அமீரகத்திற்குள் கொண்டு செல்லப்படும். பிறகு அங்கிருந்து அவை சாலை மார்க்கமாக துபாய், அபுதாபி மற்றும் அண்டை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும்.

இனி சிக்கல் இல்லை

முழு வீச்சில் இந்த புதிய துறைமுக பணிகளில் கவனம் செலுத்த அமீரகம் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த புதிய துறைமுகம் அடுத்த சுமார் 18 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது. இதற்கான கண்டிராக்டர்களை உறுதி செய்யும் பணிகளை அமீரகம் செய்து வருகிறது. யார் எவ்வளவு முதலீடு செய்வார்கள்.. உரிமை யாரிடம் இருக்கும் என்பது குறித்து இறுதிக்கட்ட ஆலோசனை நடந்து வருகிறது. இந்த புதிய துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்தால் ஹார்முஸ் முடங்கினாலும் அமீரகத்தின் வர்த்தகம் சிக்கலின்றி தொடரும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+